அஜித் முழுக் கதையை கேட்கவே மாட்டாரு... எச் வினோத் சொல்றத கேளுங்க

சென்னை : நடிகர் அஜித் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ளது வலிமை.

இந்தப் படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது.

தற்போது படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று கொண்டாடி வருகின்றனர்.

முகவரி இல்லாத முன்னேற்றம்

முகவரி இல்லாத முன்னேற்றம்

நடிகர் அஜித் எந்தவித முகவரியும் இல்லாமல் திரையுலகில் தன்னை முன்னேற்றிக் கொண்டவர். சக நடிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பை கொண்டுள்ளனர். ஆரம்ப காலங்களில் சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துவந்த இவர், தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் கொண்டாடும் அஜித்

ரசிகர்கள் கொண்டாடும் அஜித்

அஜித் எப்படி நடித்தாலும் அதை வரலாறாக கருதி அவரது ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். அவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம், விவேகம், நேர்கொண்ட பார்வை, தற்போது வலிமை என வித்தியாசமான கேரக்டர்களில் அவர் நடித்திருந்தார். அவர் எப்படி நடித்தாலும் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

இன்றைய தினம் அவர் நடிப்பில் வெளியான வலிமை படம் அவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. ஆயினும் ஏராளமானோர் பார்க்க விரும்பும் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதையடுத்து இன்றைய தினம் 4 மணிக்கு முதல் ஷோவிற்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை புக்கிங் செய்திருந்தனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

நள்ளிரவு முதலே ஏராளமான ரசிகர்களை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. முதல் ஷோவிற்கு டிக்கெட் கிடைத்தவர்கள் மட்டுமின்றி டிக்கெட் கிடைக்காத ரசிகர்களும் திரையரங்குகளில் வலிமை திருவிழாவை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

படத்தின் கதையை கேட்க மாட்டார்

படத்தின் கதையை கேட்க மாட்டார்

இந்நிலையில் அஜித் குறித்து படத்தின் இயக்குநர் எச் வினோத் முன்னதாக முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அஜித்திடம் கதையை கூறினால் அவர் அதை முழுமையாக கேட்காமல், படத்தின் ஒன் லைனை மட்டுமே கேட்பார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவரது கேரக்டர் மற்றும் சக நடிகர்களின் கேரக்டர்கள் குறித்து கேட்டுக் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக படம்

மக்களுக்காக படம்

டைம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு படம் பண்றோம் என்பதை மனதில் வைத்து படத்தை இயக்க வேண்டும் என்று அவர் தன்னிடம் படத்தின் ஆரம்பத்தில் கூறியதாகவும் எச் வினோத் தெரிவித்துள்ளார். அதை மனதில் வைத்தே வலிமை படத்தை தான் இயக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான ஒப்படைப்பு

முழுமையான ஒப்படைப்பு

மற்றபடி இயக்குநரிடம் தன்னை அவர் முழுமையாக ஒப்படைப்பார் என்றும் சில சீன்களில் நடிக்கும்போது இதுதான் கதையா என்று ஜாலியாக கேட்பார் என்றும் இயக்குநர் கூறும் காட்சிகளில் அதே போல நடித்துக் கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய முழுமையான ஒப்படைப்பும் தவறே என்று ரசிகர்கள் மைண்ட் வாய்சை தற்போது கேட்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X