என்னை பற்றிய போலியான செய்தியை பரப்பாதீங்க ப்ளீஸ்.. அதிரடியாக வரலக்‌ஷ்மி சரத்குமார் போட்ட ட்வீட்!

சென்னை: நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் சமீபத்தில் நிச்சயம் செய்துக் கொண்டதில் இருந்தே அவரைப் பற்றிய பல்வேறு விதமான செய்திகள் யூடியூப் சேனல்களிலும், சில ஊடகங்களிலும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து தன்னைப் பற்றி வரும் அவதூறு கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கும் வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் அவர் பெயரை பயன்படுத்தி வெளியான சிக்கலான செய்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் சரத்குமாருக்கும் சாயா தேவிக்கும் மகளாக பிறந்த வரலட்சுமி சரத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Varalakshmi Sarathkumar slams fake news about her spreading in some medias

அந்த படத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் முன்னணி நடிகையாகவும், வில்லியாகவும் நடித்து மிரட்டி வருகிறார். 40 வயதை நெருங்கிய வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயம் செய்துக் கொண்டார்.

2வது மனைவி சர்ச்சை: நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகளும் உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், வரலட்சுமி சரத்குமார் இரண்டாம் தாரமாக திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா? என பலரும் ட்ரோல் செய்யத் தொடங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவங்க அவங்க வேலையை பாருங்க என மறைமுகமாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

போதைப்பொருள் சர்ச்சை: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக சில செய்திகள் தீயாக பரவி வருகிறது. மேலும், அதன் காரணமாகத்தான் சரத்குமார் பாஜகவில் இணைந்தார் என்றும் வதந்திகள் கிளம்பின. இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே நடிகை வரலட்சுமி சரத்குமார் இப்படியொரு போஸ்ட்டை வெளியிட்டு இருக்கிறார் என்கின்றனர்.

பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம்: மீடியாக்கள் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நல்ல செய்தியை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பற்றிய பொய்யான செய்திகள் சில வெளியாகி வருவதை கண்டு அதிருப்தியில் உள்ளேன். பிரபலங்கள் குறித்த தவறான செய்திகள் சமீப காலமாக அதிகளவில் குவிந்து வருகின்றன. என்னைப் பற்றி வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என விளக்கம் அளித்துள்ளார்.

ஆயிரம் பிரச்சனை இருக்கு: நாட்டில் முக்கியமான பிரச்சனைகள் ஆயிரம் உள்ளது. அதையெல்லாம் மீடியாக்கள் கவனிக்கலாம். அதை விட்டு விட்டு சினிமா பிரபலங்களின் சரிவுகளை அதிகம் கவர் செய்வது ஏன் என்றும் கொந்தளித்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் வரலட்சுமி சரத்குமாரை ட்ரோல் செய்தும் ஆதரித்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X