எனக்கு நாடி, நரம்பெல்லாம் வரலட்சுமி தான்: விஷால்

By Siva

சென்னை: தனக்கு நாடி, நரம்பெல்லாம் வரலட்சுமி தான் என்று தெரிவித்துள்ளார் விஷால்.

புதுமுகம் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்டோர் நடித்த இரும்புத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சண்டக்கோழியை அடுத்து எனக்கு பிடித்த விஷால் படம் இரும்புத்திரை என்று படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

விஷால் தனது நடிப்பில் தனி முத்திரை பதித்துவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

வரலட்சுமி

இரும்புத்திரை படம் ரிலீஸான அன்று சிலருக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியிருந்தார் விஷால். அதில் வரலட்சுமியை தனது நாடி, நரம்பு என்று தெரிவித்துள்ளார்.

பிரிவு இல்லை

பிரிவு இல்லை

விஷாலும், வரலட்சுமியும் பிரிந்துவிட்டதாக இடையே செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்கள் இருவரும் நடந்து கொள்வதை பார்த்தால் பிரிந்தது போன்று தெரியவில்லை.

தோழி

தோழி

வரலட்சுமியை 8 வயதில் இருந்தே விஷாலுக்கு தெரியுமாம். வரலட்சுமி தனது வாழ்வின் வரம், பொக்கிஷம் என்று விஷால் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதை எல்லாம் பார்த்தால் அவர்களுக்கு இடையேயான காதல் வலுவடைந்துள்ளது தெரிகிறது.

வரு

வரு

மக்களுக்காக நல்லது செய்யவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டதாக விஷால் தெரிவித்தார். இந்நிலையில் பல நல்ல காரியங்களை செய்து வரும் வரலட்சுமியும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம்

நடிகர் சங்க கட்டிடம்

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு விஷால், வரலட்சுமி திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத்குமாருடன் பிரச்சனையாக இருந்தாலும் அவரின் மகள் வரலட்சுமி மீது பாசமாகவே உள்ளார் விஷால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X