அஜித், ரஜினி படங்களையே பின்னுக்குத்தள்ளிய சூரி.. இந்த ஆண்டு ‘மாமன்’ செய்த மாஸ் சம்பவம்.. விஜய்?
சென்னை: அஜித் குமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில், கும்பகோணத்தில் உள்ள வாசு தியேட்டரில், சூரி நடித்த மாமன் திரைப்படம் தான் அதிக கல்லா கட்டிய படம் என டாப் ரேட்டிங்கை வெளியிட்டு கோலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
ஒவ்வொரு நடிகருக்கும் சில ஏரியாக்கள் தொகுதி போல ஸ்பெஷலாக இருக்கும். அந்த ஏரியா மக்கள் குறிப்பிட்ட நடிகர் படங்களை விரும்பி பார்ப்பார்கள். சில தியேட்டர்களில் ஒரு படம் 1 வருஷம் கூடிய வரலாறு எல்லாம் இருக்கிறது.

டாப் ஹீரோக்கள் படங்களை பின்னுக்குத் தள்ளி கும்பகோணத்தில் உள்ள வாசு சினிமாவில் சூரியின் மாமன் படம் இந்த ஆண்டு மரணமாஸ் காட்டியுள்ளதாக தியேட்டர் நிர்வாகம் ட்வீட் போட, அஜித், ரஜினி ஹேட்டர்கள் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை பதிவிட்டு சோஷியல் மீடியாவை சூடாக்கியுள்ளனர்.
2025ம் ஆண்டு முடியப்போகுது: இப்போதான் 2025ம் ஆண்டு நியூ இயர் பார்ட்டி நடந்தது போல இருந்தது, அதற்குள் நவம்பர் மாதமே முடியப் போகிறது. இந்த மாதமும் அடுத்த மாதமும் தமிழ் சினிமாவில் பெரிதாக படங்கள் ஏதும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் என்கிற நம்பிக்கை இல்லாத சூழலில் இப்போதே இந்த ஆண்டுக்கான கவுன் டவுன்களை தியேட்டர்கள் போடத் தொடங்கிவிட்டனர். முதல் ஆளாக கும்பகோணம் வாசு சினிமாஸ் வெளியிட்டுள்ள டாப் ரேட்டிங் அறிவிப்பு சில டாப் நடிகர்களின் ரசிகர்களை ட்ரிக்கர் செய்துள்ளது.

டாப் 5 வசூல் படங்கள்: வாசு சினிமாவை பொறுத்தவரையில் இந்த ஆண்டு அந்த தியேட்டரில் அதிக வசூல் ஈட்டிய டாப் 5 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1. மாமன்
2. குட் பேட் அக்லி
3. டிராகன்
4. கூலி
5. தலைவன் தலைவி
மேலும், அதிக மக்கள் கூட்டம் வந்த டாப் 5 படங்களையும் வெளியிட்டுள்ளது,
1. மாமன்
2. டிராகன்
3. குட் பேட் அக்லி
4. கூலி
5. தலைவன் தலைவி
விஜய் படம் மிஸ்ஸிங்: ஒவ்வொரு ஆண்டும் இதற்காகத்தான் விஜய் படம் வரவேண்டும் என விரும்புகிறோம். இந்த ஆண்டு தியேட்டர் மெயின்டனன்ஸ், கரன்ட் பில், வேலை ஆட்களுக்கு பணம் கொடுக்கவே ரொம்பவே சிரமப்பட்டோம். விஜய் படத்தை இந்த ஆண்டு ரொம்பவே மிஸ் செய்கிறோம் என பதிவிட்டுள்ள நிலையில், கமெண்ட்ஸ் பக்கமே கலவர பூமியாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











