4 வில்லன்கள், ஒரு ஜில்லு!
ஜாக்கி ஷராப், ராகுல் தேவ், ரகுவரன், அப்பாஸ் ஆகியோர் இணைந்து நடிக்க வங்கி என்ற பெயரில் ஒருவித்தியாசமான படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது. இதில் வேதா சாஸ்திரி என்ற ஜில் நாயகியைஅறிமுகப்படுத்துகின்றனர்.
ஜாக்கி ஷராப், ராகுல் தேவ் லீடிங் கேரக்டர்களிலும், முக்கிய வேடங்களில் ரகுவரன், அப்பாஸ் ஆகியோரும்நடிக்க உருவாகும் படம் வங்கி. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் இப்படத்தை எடுக்கிறார்கள்.முன்னணி இந்தி ஹீரோயினை படத்தில் நடிக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். படம் படு வித்தியாசமான கதைப்பின்னணியைக் கொண்டது. ஜாக்கி தலைமையில் ஒரு குழு வங்கி ஒன்றில் ரூ. 500 கோடி பணத்தைக்கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது.
கொள்ளைக்கு நாள் குறித்து விட்டு ஜாக்கி மற்றும் ரகுவரன், ராகுல் தேவ், அப்பாஸ், சிந்து ஆகியோர் வங்கிக்குச்செல்கின்றனர். திடீரென திட்டத்தில் குழப்பம் வர 100 கோடியை மட்டும் கொள்ளையடித்து விட்டுத் தப்புகிறதுஜாக்கி அண்ட் கோ.
அந்தப் பணத்தை நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு மர்ம மாளிகையில் ஒளித்து வைக்கின்றனர். இந்தத்திருட்டுக் கும்பலை போலீஸ் எப்படிக் கண்டுபிடித்து பணத்தை மீட்கிறது என்பதுதான் கதையாம். அருண்குமார்இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் முக்கிய ஹைலைட்டே வேதா சாஸ்தி>தான். இவருக்கும் படத்தில் முக்கிய வேடமாம். நல்ல உயரத்துடன்நச்சென இருக்கிறார் வேதா. படம் முழுக்க இவரது கிளாமர் சுனாமிதானாம். கூடவே சிந்துவையும் சேர்த்துவிளையாட விட்டுள்ளனர்.
வேதா சாஸ்திரி பொங்கி எழுந்து நடித்துள்ள வங்கி விரைவில் திரைக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications