'வெடி' கொளுத்தத் தயாராகும் விக்ரம்!

'கந்தசாமி'க்குப் பின் விக்ரம் நடிக்கவிருந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது.
மணிரத்னத்தின் 'ராவணன்", செல்வராகவனின் பெயரிடப்படாத படம் என விக்ரம் திடீரென்று பிஸியாகவிட்டதால் பூபதியின் படம் தள்ளிப் போனது.
இப்போது திரைக்கதை உருவாக்கம் முழுமையாக முடிந்த நிலையில் மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கத் தயாராகிறார் விக்ரம். படத்துக்கு 'வெடி" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. செல்வராகவன் படம் முடிந்த கையோடு, இந்த வெடியைக் கொளுத்துகிறார்களாம்!
சரி்... அதென்ன வெடி? ஜனங்க நக்கலடிப்பாங்களே...!
"அதுக்கென்ன தாராளமா கிண்டலடிக்கட்டும். ஈஸியா ஜனங்களை ரீச் ஆயிடுச்சி பாருங்க. அதான் வேணும். ஆனா படத்தைப் பார்த்த பின், ஆஹா இது அதிரடி என்று பாராட்டும்படி படம் இருக்கும். சிரிப்பு, ஆக்ஷன் எனத்து சரவெடியாய் இந்தப் படம் இருக்கும்... ஆனால் ஒன்று தலைப்பு எந்த நேரமும் மாறக்கூடும். " என்கிறார் விக்ரம் தன் புன்னகை மாறாமல்!


Click it and Unblock the Notifications











