புல்லட்டில் செம கெத்தா ரைடு போன விஷால்… வீரமே வாகை சூடும் இறுதிகட்ட படப்பிடிப்பு !

சென்னை : வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதியும், வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜும் நடிக்கிறார்கள்.

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

டிம்பிள் ஹையாதி ஜோடி

டிம்பிள் ஹையாதி ஜோடி

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி நடிக்கிறார். வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இறுதி கட்ட காட்சியை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் விஷால் புல்லட்டில் அமர்ந்து இருக்க புல்லட்டை சுற்றி கேமிரா மற்றும் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காட்சியை பார்க்கும் போது அதிரடியான சண்டை காட்சியாக இருக்கும் என்பது போல தெரிகிறது. இந்த காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு டிசம்பரில் படம் திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீஸ்

தீபாவளிக்கு ரிலீஸ்

அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் எனிமி படத்தை இயக்கியுள்ளார். விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ள இந்தப் படத்தை மினி ஸ்டுடியோ தயாரித்துள்ளது. எனிமி திரைப்படம் தீபாவளிக்கு நவம்பர் 4ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

சுனைனாவுடன்

சுனைனாவுடன்

இதையடுத்து விஷால் 32 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார்.சமர் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பின் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X