உடைந்த பாட்டிலை கையில் எடுத்த விஷால்... ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனம் !
சென்னை : விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் டிசம்பரில் திரைக்கு வர உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார்.

வீரமே வாகை சூடும்
நடிகர் விஷாலில் 31வது படமான வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து முடித்துள்ளார். து.ப சரவணன் இயக்கியுள்ள 'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி சென்னையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடிக்கிறார்கள்.

கையில் உடைந்த பாட்டில்
இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் விஷாலின் பிறந்த நாள் அன்று வெளியானது. வீரமே வாகை சூடும் என்ற வித்தியாசமான தலைப்பை அனைவரும் பாராட்டினார்கள். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் கையில் உடைந்த பாட்டிலை வைத்துக் கொண்டு தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அமர்ந்து இருக்கிறார் விஷால். மேலும் அந்த போஸ்டரில் வீரமே வாகை சூடும் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

விஷால்32
இதையடுத்து, விஷால் நடிக்கும் 32வது படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தில் நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான பூஜை விஷாலின் பிறந்தநாள் அன்று போடப்பட்டது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க உள்ளார்.

எனிமி
உயிர் நண்பரான விஷாலுடன் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆர்யாவை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால். ஹீரோ இவராக இருந்தாலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யா இவரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளிலும் நடித்திருந்தார் என ரசிகர்கள் கூறினர்.

ஆயுத பூஜைக்கு ரிலீஸ்
இத்திரைப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய பட்ஜெட்டில் விஷால் ஆர்யா மீண்டும் ஒன்றிணைவதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஆயுத பூஜைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











