'வேலையில்லா பட்டதாரி.. தொட்டுப் பாத்தா ஷாக் அடிக்கும் வேறமாரி!'- 'போயட்டு' தனுஷ்
சென்னை: தனுஷுன் 25வது படம் என்ற அறிவிப்போடு வருகிறது வேல்ராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் வேலையில்லா பட்டதாரி.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷோடு போட்டி போட்டுக் கொண்டு பாடல்களும் எழுதியிருக்கிறாராம் 'கவிஞர்' தனுஷ்!

டி 25
இந்தப் படம் தனது 25வது படம் என்பதால், செல்லமாக டி 25 என்று பெயர் சூட்டி, அதையே தனது ட்வீட்களிலும் பயன்படுத்தி வருகிறார் தனுஷ்.
படத்தில் தான் எழுதியுள்ள ஒரு பாடலின் சில வரிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

போயட்டு தனுஷ்
அந்தப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது...
'வேலையில்லா பட்டதாரி..
தொட்டுப் பாத்தா ஷாக் அடிக்கும் வேறமாரி!'
- 'போயட்டு' தனுஷ்
-என்று தனது லேட்டஸ்ட் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.

அமலா பால்
இந்தப் படத்தில் தனுஷுடன் முதல் முறையாக ஜோடி சேர்பவர் அமலாபால். 3 படத்தில் தனுஷுடன் ஜோடி சேரவிருந்து கடைசி நேரத்தில் விலகியவருக்கு, இந்தப் படத்தில் மீண்டும் வாய்ப்பு வந்திருக்கிறது.

அனிருத்
படத்துக்கு இசையமைத்திருப்பவர் தனுஷுன் கண்டுபிடிப்பான அனிருத். உலகம் முழுக்க கலக்கிய கொலவெறி பாடலுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்திருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி.

கிறிஸ்துமஸ் தினத்தில்
படத்தின் டீஸரை வரும் டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுகிறார்கள். படத்தின் இசை வரும் ஜனவரி 3-ம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











