5 லட்சம் பேரை கடந்து.. 5000 பேரை பார்க்க வராரு... வேலூரில் விஜய்யை காண திங்கட்கிழமையிலேயே திரண்ட கூட்டம்!

வேலூர்: சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கூட்டம் வைத்தால் தான் மக்கள் கூட்டம் கூடுகிறது என்றும் பள்ளி விடுமுறை நாட்களில் சின்ன பசங்க தான் விஜய்யை பார்க்க வருகின்றனர் என தொடர்ந்து தவெக கட்சிக்கு எதிராகவும் விஜய்க்கு எதிராகவும் மற்ற கட்சியினர் நெகட்டிவிட்டியை பரப்பி வந்தனர். ஆனால், திங்கட்கிழமை கூட தனக்கு மக்கள் இப்படி ஆதரவு தருவார்கள் என்பதை வேலூரில் விஜய் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார் என அவரது ரசிகர்கள் #உங்கவிஜய்_நா_வரேன் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் கடைசியாக பிப்ரவரி 13ம் தேதி சேலத்தில் கூட்டத்தை நடத்தினார். அப்போது வடமாநில தொழிலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வெயிலில் மக்கள் வாடி விடக் கூடாது என்பதற்காக பந்தல் அமைத்து இன்றைய கூட்டம் நடைபெறுகிறது.

Vellore people gives a grand welcome to TVK Vijay today
Photo Credit:

வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே விஜய் வரும் இடங்களை குறிவைத்து மக்கள் கூட்டம் அலை கடலாக திரண்டு இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

மாற்று சக்தியா விஜய்?: திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பல வருடங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த நிலையில், யாராவது மாற்று சக்தி வரமாட்டார்களா என மக்கள் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை பல வருடங்களாக எதிர்பார்த்தனர். விஜயகாந்த் வந்ததும் மக்கள் ஆதரவு அவருக்கு கிடைத்தது. அவரது மறைவுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் வருவாரா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலம் காரணமாக அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், மக்கள் அவரை இயல்பாகவே நம்புகின்றனர் என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் விஜய்க்கு பெருகி வரும் ஆதரவு குறித்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

5 லட்சம் பேரை தாண்டி: விஜய் கூட்டத்துக்கு வர 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 5 லட்சம் பேரை தாண்டி விஜய் 5 ஆயிரம் பேரை சந்தித்து பேசுகிறார் என ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை பதிவிட்டு வருகின்றனர். விஜய்யின் கூட்டங்களில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும், மக்கள் கூட்டம் குறைவதே இல்லையே என்பது தான் மற்ற கட்சிகளுக்கு பெரிய தலைவலியாக உள்ளது என்கின்றனர். இன்றைய கூட்டத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழக் கூடாது என்றும் தவெகவினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X