twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாக்டர் சிம்பு.. கேட்கவே சும்மா சூப்பரா இருக்கே.. அந்த கெளரவ பட்டத்தை தரப்போவது யார் தெரியுமா?

    |

    சென்னை: நடிகர் சிலம்பரசன் டி.ஆர்.க்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

    கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கெளரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளன.

    அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' நடிகர் சிம்புவுக்கு விரைவில் டாக்டர் பட்டத்தை வழங்கப் போகிறது.

    அடக்கடவுளே நடிகர் மகேஷ் பாபுவையும் விட்டு வைக்காத கொரோனா.. சீக்கிரம் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை!அடக்கடவுளே நடிகர் மகேஷ் பாபுவையும் விட்டு வைக்காத கொரோனா.. சீக்கிரம் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை!

    மகுடம் சூட்டிய மாநாடு

    மகுடம் சூட்டிய மாநாடு

    கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சிம்புவுக்கு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவின் வாழ்வில் ஏகப்பட்ட சிறப்பான விஷயங்கள் அரங்கேறி வருகின்றன.

    டாக்டர் சிம்பு

    டாக்டர் சிம்பு

    வருகிற ஜனவரி 11-ஆம் தேதி' கெளரவ டாக்டர் ' பட்டத்தை நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கொடுத்து சிறப்பிக்க உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேசன் அறிவித்துள்ளார்.

    வேல்ஸ் நிறுவனர்

    வேல்ஸ் நிறுவனர்

    " மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள்.

    39 வருட சினிமா

    39 வருட சினிமா

    அந்த வகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.

    சிம்புவுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி

    சிம்புவுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி

    நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கெளரவிப்பதன் பொருட்டே இந்த கெளரவ டாக்டர் என்கிற அங்கீகாரம்.அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி" என ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.

    Recommended Video

    Simbhu Fans-ஐ மேடையில் புகழ்ந்த Director Vnekat Prabhu | Maanadu Success Meet
    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    நடிகர் சிம்பு இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டத்தை கொடுப்பதில் அந்த நிறுவனம் கூடுதல் சந்தோஷத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டில் கார்டில் டாக்டர் STR-னு போட்டுருவாங்க!

    English summary
    Vels University announces Doctorate to Silambarasan TR. Each year Ishari Ganesh’s Vels University gives an Honour Doctorate to popular celebrites. This year they chose STR for the honour.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X