வெங்கட் பிரபுவை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்?.. அய்யோ இது என்ன புது பஞ்சாயத்து
சென்னை:கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதுவரை 6க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் கடையாக GOAT படத்தில் நடித்தார். அந்தப் படமும் சுமாரான வரவேற்பை பெற்ற சூழலில்; அவரும் சிவகார்த்திகேயனும் இணையவிருக்கும் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க குடும்பங்களில் ஒன்று கங்கை அமரன் குடும்பம். அவர் இயக்கம், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையை கொண்டவர். அவரது மூத்த மகன் வெங்கட் பிரபு நடிகராக சில படங்களில் நடித்தார். அதற்கு பிறகு சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தை இளைஞர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து மெகா ஹிட்டை அள்ளினார். இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் பெற்றவராக மாறிவிட்டார் வெங்கட் பிரபு.

முன்னணி இயக்குநர்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய சரோஜா, கோவா ஆகிய படங்களில் சரோஜா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கோவா படம் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனதன் காரணமாக வெங்கட் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கு கிடைத்த ரிசல்ட் கோவா படத்துக்கு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு.
மங்காத்தா, மாநாடு: மங்காத்தா படம் வெங்கட் பிரபுவின் கரியரை பீக்கிற்கு எடுத்து சென்ற படம். மெகா ப்ளாக் பஸ்டர் ஆன பிறகு அவர் இயக்கி மாசு,பிரியாணி ஆகிய படங்கள் சறுக்கலை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக அவர் இயக்கிய கஸ்டடி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
விஜய்யுடன் கூட்டணி: கஸ்டடி தோல்வி அவருக்கு கஷ்டத்தை கொடுத்தாலும்; அதற்கு மருந்திடும் வகையாக விஜய்யை வைத்து இயக்கிய GOAT திரைப்படம் தனக்கு மருந்தாக அமையும் என்று எதிர்பார்த்தார் வெங்கட் பிரபு. ஆனால் அந்தப் படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். அதாவது GOAT படத்துக்கு முன்னதாகவே சிவாவும், வெங்கட்டும் இணைவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டீலில் விட்ட எஸ்.கே?: GOAT படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எஸ்கேவும் இப்போது அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸுடன் அவர் இணைந்த படத்தின் வேலைகளும் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது சிபி சக்கரவர்த்தி சொன்ன கதையில் நடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கலாம் என்று சிவா நினைப்பதாகவும்; இதன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு மேற்கொண்டு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வெங்கட் பிரபுவை சிவா டீலில் விட்டுவிட்டாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











