GOAT மட்ட.. திரிஷா அணிந்திருந்த காஸ்ட்யூம்.. விஜய் கட்சி கொடியா?.. அது யாரோட ஐடியா?.. VP ஷேரிங்ஸ்
சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியிருந்தார் திரிஷா. அது தியேட்டர்களில் பெரும் சரவெடியாக இருந்தது. மேலும் இருவருக்குமான கெமிஸ்ட்ரி இன்னமும் அப்படியே இருக்கிறதே என்று ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியமடைந்தனர். இந்தச் சூழலில் அந்தப் பாடல் குறித்து வெங்கட் பிரபு பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார்.

GOAT படமும் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டது. எனவே இப்படிப்பட்ட வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு அவர் வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி படம்: விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அது முழுக்க முழுக்க அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக அமையும் என்று வினோத் கூறியிருக்கிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. அதேசமயம் விஜய் நடிப்புக்கு டாட்டா சொல்வது ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. பலரும் விஜய் நடிப்பை விட்டு போக வேண்டாமே என்றே சொல்கிறார்கள்.
ஃபுல் ஃபார்ம்: இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தாக்கத்தை வீரியமாக காட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் விஜய். அதற்கான முன்னெடுப்புகளில் விஜய் இப்போது தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. அதேபோல் அரசியல் கட்சியாகவும் தவெகவை அங்கீகரித்துவிட்டது தேர்தல் ஆணையம்.
மட்ட பாடல்: இதற்கிடையே GOAT படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியிருக்கிறார். இதுவரை அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதென்பது அரிது. இப்போது விஜய்யுடன் ஆடியிருப்பதால் அவருக்கும், விஜய்க்கும் உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மேலும் இருவருக்குமான கெமிஸ்ட்ரியையும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள். மேலும் அதில் கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படி போடு பாடலின் நடன அசைவுகளும் இருந்தது க்யூட்டாக இருந்தது.
வெங்கட் பிரபு பேட்டி: மேலும் அப்பாடலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒன்று என்றால் அது திரிஷா அணிந்திருந்த காஸ்ட்யூம் நிறம். ஏனெனில் மஞ்சள் மற்றும் பிங்க் கலந்த புடவையை அணிந்திருந்தார். அதனைப் பார்த்த அவர்கள் விஜய்யின் கட்சி கொடி நிறத்தையே திரிஷா பயன்படுத்தியிருப்பதாக டீகோட் செய்ய ஆரம்பித்தார்கள். இந்நிலையில் வெங்கட் பிரபு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், "அந்தப் பாடலுக்கு திரிஷா மஞ்சள் நிற புடவை அணிந்து ஆடட்டும் என்பது ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துதான் முடிவு எடுத்தேன். அவரும் கட்டிக்கொண்டு வந்தார். ஆனால் முழுக்க முழுக்க மஞ்சள் நிறமாக இருந்தது. அதனைப் பார்த்துவிட்டு மஞ்சள் நிற புடவையில் பாடல் என்றாலே அது முழுக்க முழுக்க மிஷ்கின் ஸ்டைல் பாடலாகத்தான் இருக்கும். இதுவும் அந்த மாதிரி நினைக்கப்பட்டுவிடுமோ என்று யோசித்தேன். உடனே என்னிடம் வந்த திரிஷா, வெங்கட் பிரபு இந்த புடவையில் பிங்க் நிறத்தில் நான் ஒன்று சேர்த்துக்கொள்கிறேன். அப்படி செய்தால் முழுக்க முழுக்க மஞ்சள் நிற புடவையாக இருக்காது என்று சொல்லி; அவர்தான் அந்த ஐடியாவை கொடுத்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications