சிவகார்த்திகேயனால் வெங்கட் பிரபு பட்ட கடன்?.. இத்தனை கோடி ரூபாயா?.. என்னங்க நடக்குது?
சென்னை: விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய GOAT திரைப்படம் கடைசியாக வெளியாகி தோல்வியை சந்தித்தது. ரிலீஸுக்கு முன்னதாக படம் பற்றி ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டன. ஆனால் ரசிகர்களுக்கு படம் திருப்தியை தரவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் குறித்து அடுத்தக்கட்ட அறிவிப்புகளும் வரவில்லை; பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து இயக்கிய அவர்; அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை எடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் வெங்கட்டின் கரியர் ஒரே படத்தில் ஓஹோவென்று மாறியது. மங்காத்தா கொடுத்த வெற்றி; பெரிய ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அந்தவகையில் சூர்யாவை வைத்து இயக்கிய மாஸ் படம் தோல்வியடைந்தது.

விஜய்யுடன் கோட்: அஜித்துடன் இணைந்து மெகா ஹிட் கொடுத்த வெங்கட் எப்போது விஜய்யுடன் இணைவார் என்று தளபதி ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த கோட் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, பிரேம்ஜி அமரன், வைபவ், மீனாட்சி சௌதரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தின் மீது எக்கச்சக்க ஹைப் எகிறியிருந்தது.
என்ன ஹைப்?: அதாவது இந்தப் படம் விஜய்யின் கரியரில் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று தகவல்களை கசியவிட்டார்கள். அதுமட்டுமின்றி டைம் ட்ராவல் ஜானரில் உருவாகும் என்றும் கிளப்பிவிடப்பட்டது. இப்படி பல விஷயங்களை தங்களது எண்ணத்தில் ஏற்றிக்கொண்டு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது. அரத பழசான தந்தை - மகன் மோதல் கதையை பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்து வைத்திருந்தார் இயக்குநர்.
எஸ்கேவுடன் படம்: கோட் படத்தின் தோல்வி கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும். எனவே அடுத்த படத்தில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கவிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பே இந்தக் கூட்டணியில் படம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அப்போது விஜய்யின் கோட் பட வாய்ப்பு வந்ததால் அங்கு சென்றார் இயக்குநர். அந்தப் படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் எஸ்கேவுடனான படம் தொடங்கப்படவில்லை.
ட்ராப்பானதா படம்?: இப்போது தொடங்கிவிடும், அப்போது தொடங்கிவிடும் என்று தகவல்கள் வெளியானாலும்; ஆனபடியாக எந்தப் பணியும் தொடங்கவில்லை. சிவகார்த்திகேயனோ பராசக்தி படத்துக்கு பிறகு சேயோன் படத்தில் கமிட்டாகிவிட்டார். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வெங்கட் பிரபுவுடனான படத்தின் பட்ஜெட் பிரச்னை ஆகிவிட்டதாகவும்; சிவகார்த்திகேயனும் சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதாலும் படத்தை ட்ராப் செய்ய முடிவெடுத்துவிட்டார்களாம்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் மூன்றரை கோடி ரூபாய் வெங்கட் பிரபுவுக்கு அட்வான்ஸ் கொடுத்ததாகவும்; அதை வட்டியோடு சேர்த்து 8 கோடி ரூபாயாக கொடுக்க கண்டிஷன் வைக்கப்பட்டதாகவும்; அதற்கு இயக்குநரும் ஒத்துக்கொண்டுவிட்டார் என்றும் தகவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications














