நாம சேர்ந்து படம் பண்ணலாமா...? வெங்கட் பிரபு கேள்விக்கு விஜய் ‘ஸ்மைலி’!
சென்னை: கடந்த சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார் நடிகர் விஜய்.
அப்போது, கத்திப் பட பிரச்சினை, கோக் சர்ச்சை, சூப்பர் ஸ்டார் பட்டம் உட்பட ரசிகர்கள் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் விஜய் விடையளித்தார்.
இந்நிலையில், ரசிகர்களோடு ரசிகராக நைஸாக உள்ளே புகுந்து "மங்காத்தா" வெங்கட் பிரபுவும் விஜயிடம் கேள்வி ஒன்றை முன் வைத்தார்.

புதிய படம்...
அதாவது, நாம் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றலாமா? என்பது தான் அந்தக் கேள்வி.

ஸ்மைலி...
அதற்கு விஜய், ஸ்மைலி குறியீடு ஒன்றைப் பதிலாக பதிவு செய்துள்ளார்.

விரைவில் சந்திக்கிறேன்...
விஜயின் புன்னகையை தனக்கு சாதகமான பதிலாக எடுத்துக் கொள்வதாக கூறியுள்ள வெங்கட் பிரபு, புதிய படம் தொடர்பாக விரைவில் அவரைச் சந்திப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

ஆச்சர்யமில்லை...
இது ஒரு ஜாலியான உரையாடலாக இருந்தாலும், விரைவில் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மாஸ்...
வெங்கட் பிரபு தற்போது சூர்யா, நயன்தாரா நடித்து வரும் மாஸ் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்காத்தா...
ஏற்கனவே அஜீத்தை வைத்து மங்காத்தா என்ற சூப்பர் டூப்பர் ஹிட்டைக் கொடுத்தவர் வெங்கட் பிரபு. இந்த நிலையில் விஜய்யுடனும் அவர் இணைந்தால், விஜய் ரசிகர்களும், இனி வெங்கட் பிரபுவைக் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











