வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் பிரச்னையா?.. அடபோங்கப்பா.. பட பூஜைகளுக்கே அவரை தான் கூப்பிடுறாரு!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறனுக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே பிரச்னை என்றும் சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு எதிராக தனுஷ் NOC வழங்க பணம் கேட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவின. உடனடியாக அதற்கு வெற்றிமாறன் வீடியோ ஒன்றை தனது சொந்த யூடியூப் சேனலிலேயே வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.
வெற்றிமாறன் தான் தனுஷ் குறித்து இப்படி பேசுகிறார் என்றும் தனுஷ் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லையே என மீண்டும் கிண்ட ஆரம்பித்தவர்களுக்கு தரமான பதிலடியை இன்று தனுஷ் கொடுத்திருக்கிறார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. அந்த பூஜைக்கும் இயக்குநர் வெற்றிமாறனைத்தான் தனுஷ் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். மேலும், டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் அந்த விழாவில் பங்கேற்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனுஷின் 54வது பட பூஜை: வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் போர் தொழில் படத்தை இயக்கி வெற்றிக் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள டி 54 படத்தின் படபூஜை இன்று போடப்பட்டது. சுமார் 10 இயக்குநர்களை வைத்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் தரமான 10 படங்களை கொடுத்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் 2, தனுஷ் படம், ரவி மோகன் படம், வெற்றிமாறன் படம் என இறங்கி விளையாடி வருகிறார். முன்னதாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான பல படங்கள் சரியாக போகாத நிலையில், வெற்றிப் படங்களை தரும் இயக்குநர்களை பெரிதாக இந்த முறை அவர் நம்பி பல கோடிகளை இறக்கியிருக்கிறார்.
சிறப்பு விருந்தினரே வெற்றிமாறன் தான்: தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பகை வெடித்து விட்டதாக இன்னமும் ஊதிப் பெரிதாக்க முயற்சித்து வரும் நபர்களுக்கு நெத்தியடி பதில் கொடுக்கும் விதமாக இன்று நடைபெற்ற படபூஜை நிகழ்ச்சியில், வெற்றிமாறன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் நடிக்கப் போவதாக தெரிகிறது. அவர்களும் இன்று நடைபெற்ற படபூஜையில் பங்கேற்றுள்ளனர்.
மமிதா பைஜு வரவில்லை: விஜய்யுடன் ஜன நாயகன், சூர்யாவுடன் வெங்கி அட்லூரி படம், விஷ்ணு விஷால் உடன் இரண்டு வானம் என கிட்டத்தட்ட 5 பெரிய படங்களில் நடித்து கோலிவுட்டில் பிசியான நடிகையாக மாறியுள்ள மமிதா பைஜுதான் தனுஷுக்கு ஜோடியென தகவல்கள் வெளியான நிலையில், இன்று நடைபெற்ற பட பூஜையில் அவர் பங்கேற்கவில்லை. இன்னமும் ஹீரோயின் உறுதி செய்யப்படவில்லையா? அல்லது மமிதா பைஜு பிசியாக இருப்பதால் தான் வரவில்லை என்றும் கூறுகின்றனர்.

தேசிங்கு பெரியசாமி பட பூஜைக்கும்: முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து அமரன் எனும் மெகா பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகும் படத்திற்கான பூஜை இதே போல போடப்பட்டது. அதிலும் வெற்றிமாறன் பங்கேற்றிருந்தார். வெற்றிமாறனுடன் இப்போதைக்கு படம் பண்ணவில்லை என்றாலும், தன்னுடைய சகோதரரை போலவே தனுஷ் பட பூஜை விழாக்களுக்கு வெற்றிமாறனை அழைத்து வருகிறாரே என பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











