Soori: சூரிக்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் ரோல்.. விடுதலை படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டு!
சென்னை: காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோக்களாக அந்த காலம் தொட்டு இன்று வரை நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக நடிகர் சூரியும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் இணைந்துள்ளார்.
பொதுவாகவே காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறும் போது காமெடி படங்களிலேயே அறிமுகமாவார்கள். ஆனால், நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறனின் தரமான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், வரிசையாக கொட்டுக்காளி உள்ளிட்ட சில படங்கள் சூரியை ஹீரோவாக வைத்து தயாராகி வருகிறது.

பரோட்டா சூரி
வெண்ணிலா கபடி குழு படத்தில் அந்த கோட்டை எல்லாம் அழி.. முதலில் இருந்து பரோட்டா சாப்பிடுகிறேன் என சொல்லி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மாறியவர் சூரி. இன்றைக்கு காமெடி நடிகராக நான் நடித்த படங்களின் கோட்டை எல்லாம் அழி முதலில் இருந்து ஹீரோவாக அதகளம் செய்ய வருகிறேன் என விடுதலை படத்தின் மூலமாக மிரட்டி உள்ளார்.

இரண்டாம் பாதியில் தான் விஜய்சேதுபதி
போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் சூரி நடித்துள்ளார். முதல் பாதி மட்டுமின்றி படம் முழுக்கவே சூரியின் நடிப்பு ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அதிலும், அந்த ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் ரிஸ்க் எடுத்து ஏகப்பட்ட காயங்களை பெற்று நடித்திருக்கிறார். பெருமாள் வாத்தியாராக நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு தான் மிரட்டுகிறார்.

ரசிகர்கள் பாராட்டு
வடிவேலு, சந்தானம், யோகி பாபு மற்றும் சதீஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்து சமீபத்தில் பல படங்கள் வந்துள்ளன. அதில், யோகி பாபுவின் மண்டேலா படம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், அதே போலவே நல்ல கருத்துள்ள படமான விடுதலை படத்தில் சூரி ஹீரோவாக அறிமுகமாகி உள்ளதை பார்த்த ரசிகர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

லைஃப்டைம் செட்டில்மென்ட்
சூரிக்கு இயக்குநர் வெற்றிமாறன் லைஃப் டைம் செட்டில்மென்ட் ரோலை கொடுத்து மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த பாகத்தை விரைவில் விடுங்க வெற்றிமாறன் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த படத்தில் தன்னை நடிக்க வைத்து அழகு பார்த்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு அனைத்து பேட்டிகளிலும் நன்றி தெரிவித்து வருகிறார் நடிகர் சூரி.

ஹானஸ்ட் காப்
விடுதலை படத்திற்கு ஏன் மற்ற நடிகர்களை விட்டு விட்டு இயக்குநர் வெற்றிமாறன் சூரியை தேர்ந்தெடுத்தார் என்பதற்கு ஃபர்ஸ்ட் ஹாஃபிலேயே தரமான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சூரியின் இன்னொசன்ஸ் தான் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. ஹானஸ்ட்டான போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் சூரி கலக்கி இருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தேசிய விருது
அந்த தேசிய விருதை எடுத்து வை.. தலைவர் வெற்றிமாறன் வருகிறார் என்றும் சூரிக்கு இது லைஃப்ட் டைம் ரோல். மனுஷன் படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரித்து மேய்ந்திருக்கிறார் என விடுதலை படத்தை தியேட்டரில் இன்று பார்த்து ரசித்த ரசிகர்கள் பலரும் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். விடுதலை இரண்டாம் பாகம் வெகு விரைவாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











