சிம்பு - வெற்றிமாறனின் அரசன்.. முக்கிய ரோலில் விஜய் சேதுபதி.. வடசென்னையில் மிஸ் ஆனது இப்போ நடந்துடுச்சு
சென்னை: சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் அரசன் படம்தான் கோலிவுட்டில் ஏகப்பட்ட ஹைப்புகளை பெற்ற படமாக மாறியிருக்கிறது. கலைப்புலி தாணு தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவிருக்கும் சூழலில்; நடிகர் விஜய் சேதுபதில் இப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பை தாணு வெளியிட்டிருக்கிறார்.
சிம்பு இப்போது பழையபடி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். அதன் பலனாக மாநாடு, வெந்து தணிந்தது காடு என வரிசையாக ஹிட் கொடுத்தார். மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்த அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்டோரின் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
வெற்றிமாறனுடன் அரசன்: இவை அனைத்தையும் தாண்டி பெரிய சர்ப்ரைஸ் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க கமிட்டானதுதான். ஏற்கனவே வடசென்னை படத்தை சிம்புவை வைத்துதான் இயக்குவதாக இருந்தார் வெற்றி. ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் எஸ்டிஆர் நடிக்கவில்லை. தற்போது இணைந்திருக்கும் அரசன் படத்தின் மூலம் அது நடந்திருப்பதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்பு: இப்படம் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் என்று வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்த வெற்றிமாறன் வடசென்னை யுனிவர்ஸில் நடக்கும் இன்னொரு கதையாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார். பிரபல் ரவுடியான மயிலை சிவாவின் வாழ்க்கையை தழுவித்தான் இப்படம் எடுக்கப்படவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டைட்டில் அறிவிப்பு வீடியோ: இப்படம் கண்டிப்பாக தரமான சம்பவத்தை செய்யும் என்பது எஸ்டிஆர் மற்றும் வெற்றி ரசிகர்களின் ஆழமான நம்பிக்கி. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவும்கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில்; ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி மேலும் சர்ப்ரைஸை கொடுத்திருக்கிறது.
அரசன் படத்தில் விஜய் சேதுபதி: அதன்படி அரசன் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான ரோலை ஏற்கவிருக்கிறார். இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் பக்கத்தில், "மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே வடசென்னை படத்தில் அமீர் ஏற்றிருந்த ராஜன் கதாபாத்திரத்தை சேதுதான் ஏற்பதாக இருந்தது. சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











