வாடிவாசல் படத்தை விடாத சூர்யா.. சூப்பர் முடிவு எடுத்திருக்காராம்.. எப்போது ஷூட்டிங் தொடக்கம்?

சென்னை: பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் பெரும் தாக்கத்தை சினிமா துறையினரிடமும், ரசிகர்களிடமும் விதைத்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கிவருகிறார். அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவார் என தெரிகிறது.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன் என்பது அனைவருமே அறிந்ததுதான். தனுஷை வைத்து இயக்கியு முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அதுவும் ஒரு கமர்ஷியல் டச்சில் உருவாகியிருந்தாலும்; ஆர்ட் ஃபிலிமாகவும் ஜொலித்தது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை சர்வதேச அளவில் பெரிய கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது.

Vetrimaaran s Vaadivaasal Update Suriya Allots 130 Days Shoot to Begin Soon
Photo Credit:

வடசென்னையில் சந்தித்த விமர்சனம்: வெற்றிமாறனின் படங்கள் பெரும்பாலும் விமர்சனத்தை சந்திக்காது. ஆனால் வடசென்னை படம் அதற்கு விதி விலக்காக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோருக்கு அந்தப் படம் பிடித்திருந்தாலும் ஒருதரப்பினரோ; வடசென்னை மக்களை வெற்றிமாறன் மோசமாக சித்தரித்துவிட்டார் என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போதும் அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்துக்கு ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். விரைவில் ஷூட்டிங் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

சிம்புவுடன் படம்: கடைசியாக அவர் விடுதலை 2 படத்தை இயக்கினார். இப்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரை ஏற்றிருக்கிறார். கடந்த சில வாரங்களாக ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டிருந்தது. சிம்புவும் அமெரிக்காவிலிருந்து திரும்பிவிட்டார். எனவே இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இந்த ஷெட்யூலில் சிம்பு, விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகளை இயக்குநர் படமாக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.

Also Read
விஜய்யுடன் சங்கீதா.. தஞ்சாவூர் கூட்டத்தில் நடந்த விஷயம்.. விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்
விஜய்யுடன் சங்கீதா.. தஞ்சாவூர் கூட்டத்தில் நடந்த விஷயம்.. விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்

வாடிவாசல் நிலைமை: இதற்கிடையே சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் வெற்றி. நாவல்களையும், சிறுகதைகளையும் வெற்றிமாறன் திரைப்படங்களாக மாற்றுவதில் வல்லவர்; அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அறிவிப்பு வந்து டெஸ்ட் ஷூட்டெல்லாம் செய்தார்கள்.

சூர்யா செய்திருக்கும் செயல் இதுவா?: ஆனால் அதற்கு பிறகு எதுவும் அரங்கேறவில்லை. ஒருவேளை படம் ட்ராப்பாகிவிட்டதோ என்று பலரும் கூறினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்துக்காக மொத்தம் 130 நாட்கள் கால்ஷீட்டை சூர்யாவிடம் இயக்குநர் கேட்டதாகவும்; அதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டார்; ஆனால் ஒரேயடியாக கொடுக்காமல் பத்து, இருபது நாட்களாக கொடுக்க சூர்யா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஷூட்டிங் குறித்த அப்டேட்டும் வரலாம் என கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X