'அசுரன்'... வெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி சேரும் தனுஷ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு அசுரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை : தனுஷ் நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், இயக்குனர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட திறமையாளர். இவர் நடிப்பில் நேற்று வெளியான மாரி 2 படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Vetrimaran to direct Dhanush again

நேற்று வெளியான ஆறு படங்களில் மாரி 2 தான் அதிக வசூல் பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தனுஷ் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் " ரசிகர்களிடமிருந்து மாரி 2 படத்தின் வெற்றிச் செய்தி வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, எனது அடுத்த படம் குறித்து இப்போது அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடிக்கிறேன். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வட சென்னை ஆகிய படங்கள் ஏற்கனவே வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. வடசென்னை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் நான்காவது படமாக அசுரன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X