twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெற்றிமாறன் சொல்வதை பார்த்தால் தனுஷ் அநியாயத்திற்கு நல்லவர் போலயே!!

    By Siva
    |

    Recommended Video

    வட சென்னை ரியல் ஹீரோ வெற்றி மாறன் தான்- வீடியோ

    சென்னை: தயாரிப்பாளர் தனுஷ் எவ்வளவு பொறுமையானவர் என்று வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள வட சென்னை படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில் படத்தை தயாரித்துள்ள தனுஷ் பற்றிய சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறன் கூறியதாவது,

    வட சென்னை

    வட சென்னை

    அது ஒரு கனா காலம் படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தபோது ஒருவரை சந்தித்தேன். அவர் தன் வாழ்வில் நடந்த கதையை சொன்னார். எனக்கு வட சென்னை குறித்த ஐடியா கிடைத்தது. இது குறித்து தனுஷிடம் அப்பொழுதே தெரிவித்தேன். கதை சொன்னவர் அதை எழுதியே கொடுத்தார்.

    ஆடுகளம்

    ஆடுகளம்

    பொல்லாதவன் படத்தை முடித்துவிட்டு வட சென்னை படம் பண்ணலாம் என்று நினைத்தோம். பட்ஜெட் இல்லை. ஆடுகளம் முடித்து பண்ணலாம் என்று நினைத்தும் முடியவில்லை. தனுஷ் தயாரிப்பாளராக மாறிய பிறகே இந்த படத்தை பண்ண முடியும். இந்த படத்தை பொருத்த வரை தயாரிப்பாளர் தனுஷ் தான் முக்கியம். நான் இந்த படத்தின் ஷூட்டிங்கை துவங்கி 29 மாதங்கள் ஆகிவிட்டது. இத்தனை மாதங்களில் எப்ப சார் படத்தை முடிப்பீர்கள் என்று ஒரு முறை கூட தனுஷ் கேட்டது இல்லை.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    இந்த படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அவருக்கு வேறு கமிட்மென்ட் இருந்ததால் நடிக்க முடியவில்லை. விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. அவருக்கும் டேட்ஸ் பிரச்சனை. அதனால் நடிக்க முடியாமல் போனது. இந்த படத்தின் லுக் டெஸ்டுக்கு வந்தவர்கள் படத்தில் நடிக்கவில்லை. ஆண்ட்ரியா மட்டும் தான் எத்தனை ஆண்டுகளானாலும் நடிப்பது என்ற முடிவுடன் இருந்தார்.

    கிஷோர்

    கிஷோர்

    முதலில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தில் கிஷோரும், கிஷோரின் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதை மாற்றிவிட்டேன். வட சென்னை படத்தில் நிறைய விஷயங்கள் மாறிவிட்டது. விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தான் அமீர் நடித்துள்ளார். படப்பிடிப்பு துவங்கிய பிறகே அமீரின் கதாபாத்திரம் பெரிதாக்கப்பட்டது என்று தெரிவித்தார் வெற்றிமாறன்.

    English summary
    Vada Chennai director Vetrimaran has praised producer Dhanush for his patience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X