ரஜினி லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்.. அமிதாப் ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்.. மனம் திறந்த வேட்டையன் இயக்குநர்
சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் வேட்டையன். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் கடந்த மாதம் பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினர், ரசிகர்கள் கலந்துகொண்டனர். வழக்கம்போல் ரஜினிகாந்த் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் குறித்து படத்தின் இயக்குநர் ஞானவேல் பேசியிருக்கிறார்.
ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஞானவேல் முக்கியமான இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதிருந்தே எழ ஆரம்பித்திருக்கிறது.

படம் ரிலீஸ்: படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளியான ஜெயிலர் படம் உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக அந்த அளவுக்கு வசூல் செய்யுமா இல்லை அதனைவிடவும் அதிகம் வசூலித்து கெத்து காட்டுமா என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதேபோல் இப்படத்தில் கமர்ஷியல் கலவை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வருடம் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், ரசிகர்களும் கலந்துகொண்டார்கள். இந்த ஆடியோ லான்சில், ஒருமுறை ஞானவேலுவிடம் தான் ஒரு கதையை சொன்னதாக கழுதை, டோபி கதையை சொன்னார் ரஜினி. அந்தக் கதையை அவர் சொல்லும்போதும், சொல்லி முடித்தபோதும் ஆடியோ லான்ச் நடந்த ஆடிட்டோரியம் ஆரவாரத்தில் குலுங்கியது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஞானவேல் பேட்டி: படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் பற்றி இயக்குநர் த.செ.ஞானவேல் பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், "அமிதாப் பச்சன் முதல் இருக்கை மாணவர். ரஜினியோ கடைசி இருக்கை மாணவர். அமிதா நம்மை பயங்கரமாக டென்ஷனாக்குவார். சீன் பேப்பரை வாங்கி படித்து பார்ப்பார். இது என்ன வார்த்தை என்ன வருது எங்கே வருது இதில் நான் என்ன செய்ய வேண்டும் என ஷூட்டிங்கிற்கு முதல் நாளே ரெடியாவார்.
காலையில் போனால் போதும்: ஆனால் ரஜினியிடம் அப்படி இல்லை. அவரிடம் காலையில் சென்று சொன்னால் போதும் ஷாட் போய்விடலாம். ஒருமுறை அமிதாப் மேனேஜரிடம் நான், நாளைக்கு சீனுக்கு இன்று என்னை ரொம்ப டார்ச்சர் செய்கிறார் என்று சொன்னேன். அவர்கள் சிரித்தார்கள். அவர் எல்லா இயக்குநர்களிடம் இப்படித்தான் நடந்துகொள்வார். மறுநாள் ஷூட்டிங்கிற்கு ரொம்பவே தயாராக வருவார். அவருடன் டிராவல் செய்வது கஷ்டம்" என்றார்.


Click it and Unblock the Notifications











