சிக்ஸ்பேக் மட்டும் ஃபிட்னஸ் இல்லை பாஸ்.. சட்டையை கழட்டி மிரட்டி விட்ட விஜய், ரன்பீர் கபூர்!
சென்னை: சிக்ஸ்பேக் எல்லாம் சமீப காலமாகத்தான் நடிகர்கள் வைத்து வருகின்றனர். அப்போதிருந்தே தங்களது உடம்பை சரத்குமார் போலவும், சத்யராஜ் போலவும் கட்டுமஸ்த்தாக பல நடிகர்கள் மெயின்டெயின் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் மற்றும் ரன்பீர் கபூரின் சட்டையில்லாத ஃபிட்னஸ் உடம்பை பார்த்து ரசிகர்கள் இதுவும் ஃபிட்னஸ் தான் என பதிவிட்டு வருகின்றனர்.

உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க தீவிரமாக பல நடிகர்கள் ஜிம்மில் மணிக்கணக்காக வொர்க்கவுட் செய்து சிக்ஸ்பேக் வைத்து வருவதையும் சமீப காலத்தில் அதிகம் பின் பற்றி வருகின்றனர்.
விஜய் ஃபிட்னஸ்: கில்லி படத்தில் பார்த்ததை போலவே லியோ படத்திலும் நடிகர் விஜய் சட்டையை கழட்டி சும்மா தனது ஃபிட்னஸை படத்தின் பல காட்சிகளில் காட்டி மிரட்டி உள்ளார். 49வயதை கடந்து 50 வயதை நெருங்க உள்ள நிலையிலும், ஏஜ் இஸ் ரிவர்ஸ் கியர் என்பது போல அழகாகவும் செம ஃபிட்டாகவும் விஜய் இருப்பதை பார்ப்பதே அவரது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக திரையில் அமைந்து வருகிறது.
ஒரு சின்ன ஃபிரேமுக்குள் நுழைந்து செல்வார்: லியோ படத்தின் செம சூப்பரான சீன் என்றால் அத்தனை பேரும் அந்த காபி ஷாப் ஃபைட்டை தான் சொல்வார்கள். காஷ்மீரில் நடப்பதை போல வெளியே காட்டி விட்டு உள்ளே நடக்கும் காட்சிகளை சென்னையிலேயே செட் போட்டு லோகேஷ் படமாக்கி உள்ளார். கரு கரு கருப்பாயி, தாமரை பூவுக்கும் பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு சாண்டி, மிஷ்கின் உடன் விஜய் சண்டை போடும் காட்சிகளில் ஒரு சின்ன ஃபிரேம் போன்ற இடத்தில் அசால்ட்டாக புகுந்து நடிகர் விஜய் வெளியே வந்து சண்டை போடும் காட்சியில் அவரது ஃபிட்னஸ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கும்.
அனிமல் ரன்பீர் கபூர்: பிரபாஸ், சூர்யா, விஷால், ரன்வீர் சிங், ஷாருக்கான் என பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்து மிரட்டி வரும் நிலையில், நடிகர் விஜய் போலவே கட்டுக்கோப்பான உடம்பு என்றால் சிக்ஸ்பேக் தான் என்றெல்லாம் கிடையாது என்பதை அனிமல் படத்தில் ரன்பீர் கபூரும் உணர வைத்துள்ளார். அவரது சட்டை இல்லாத புகைப்படத்தையும் விஜய்யின் சட்டை இல்லாத போட்டோவையும் போட்டு ரசிகர்கள் இப்படியும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி வருகின்றனர். அனிமல் படம் உலகம் முழுவதும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது.
மாரடைப்பு: சிக்ஸ்பேக் வைக்க வேண்டும் என சமீப காலமாக பல இளைஞர்களும் பெண்களும் ஜிம்மில் தீவிர வொர்க்கவுட்டை தாறுமாறாக செய்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போகும் நிலையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்து வருகிறோம். எப்போதுமே போதுமான உடற்பயிற்சியை செய்து உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டாலே போதும் என்றும் கட்டுகள் தனித்தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











