Ajithkumar Racing: துபாயை அலறவிட்ட அஜித்குமார் ரேஸிங்.. அடுத்து எங்கு களமிறங்கறாங்கனு தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி கடந்த ஆண்டில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு, இந்த ஆண்டு அக்டோபர் வரை நடைபெறவுள்ள ஜிடி 3 ரக கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளது. மொத்தம் பல கட்டங்களாக நடக்கும் இந்த கார் பந்தயத்தின் முதல் கட்டம் துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜித்குமாரின் ரேஸிங் அணி, Porsche 911 GT3 பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. அக்டோபர் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிகளில் அஜித்குமார் அணி அடுத்து எங்கு களமிறங்கப்போகின்றது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அஜித்குமார் நடிப்பில் எந்த அளவிற்கு ஆர்வமானவரோ, அதைவிட அதிகமாக கார் ரேஸில் ஆர்வம் கொண்டவர். கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் என எப்போதும் தனது ஆர்வத்தினை வெளிப்படுத்தி வருபவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அஜித்குமார் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு 12வது இடத்தினைப் பிடித்திருந்தார். அப்போது அஜித்குமார் சோலோவாக கலந்து கொண்டார். ஆனால் இம்முறை தனது பெயரில் ரேஸிங் அணி ஒன்றினை உருவாக்கி அதற்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றார்.

அஜித்குமார் இந்த ஆண்டு நடைபெறும் ரேஸில் கலந்து கொள்ள முன்னர் இருந்தே திட்டமிட்டு, தனது அணியை உருவாக்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல், தான் ஒப்புக் கொண்ட படங்களையும் ரேஸ் தொடங்குவதற்கு முன்னரே முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு கார் ரேஸில் கலந்து கொள்ள வந்துள்ளார். மேலும் இனி வரும் ஆண்டுகளில் ரேஸ் நடக்கும் காலங்களில் படங்களில் நடிக்க மாட்டேன் எனவும், மற்ற நாட்களில் படத்தில் நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் ரேஸிங்: இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் ஒரு பக்கம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமார் ரேஸ் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர், பயிற்சியின்போது கோர விபத்தில் சிக்கினார். நல்வாய்ப்பாக அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் 24 மணி நேரம் நடக்கும் கார் ரேஸில் முதல் நாளான 11ஆம் தேதி அவர் கார் ஓட்டவில்லை. 12ஆம் தேதி கார் ஓட்டினார். இவரது அணிக்கு ஆதரவு அளிக்கவும் அஜித்துக்கு வாழ்த்துகள் கூறவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் துபாய் கார் ரேஸினை நேரில் பார்க்கச் சென்றனர்.
பாராட்டு: இவருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தைப் பார்த்துவிட்டு, நிரூபர்கள் அஜித்திடம் கேள்வி எழுப்ப, தான் எனது ரசிகர்களை அதிகம் நேசிப்பதாக தெரிவித்தார். போட்டியில் மூன்றாவது இடம் வென்ற பின்னர், ரசிகர்களை நோக்கி தேசியக்ன் கொடியை ஏந்திக் கொண்டு வந்தார் அஜித். அஜித்துக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் வாதிகள் என பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.
அடுத்து போட்டிகள் விபரம்: துபாயில் சம்பவம் செய்த அஜித்குமார் ரேஸிங் அணி அடுத்ததாக இத்தாலி நாட்டில் உள்ள முகெல்லோ (Mugello)-வில் வரும் மார்ச் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் கார் ரேஸில் பங்கேற்க தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இதையடுத்து பெல்ஜியமில் உள்ள Spa-Francorchamps-இல் கார் ரேஸில் கலந்து கொள்ளவுள்ளனர். இங்கு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 14ஆம் தேதியில் இவரது படமான குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











