விஜய்யிடம் கதை சொன்ன விடாமுயற்சி இயக்குநர்.. ஆனால் சரியான ட்விஸ்ட் நடந்திருக்கே

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். இதன் காரணமாக அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி விஜய்யிடம் கதை சொல்லியது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை வெங்கட் உருவாக்கியிருந்தாலும் பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை. முக்கியமாக திரைக்கதையில் பெரிய ஓட்டை இருந்ததாகவும்; மேக்கிங்கில் எந்தவிதமான புதுமையும் இல்லை என்று ஓபனாகவே பேசினார்கள் ரசிகர்கள்.

vidaamuyarchi magizh thirumeni vijay

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. அதற்கான முழு பணிகளில் அவர் இறங்கிவிட்டார். இதன் காரணமாக விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 69: இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. விஜய்யோ படத்தின் ஷூட்டிங், அரசியல் மீட்டிங் என பிஸியாக இருந்துவருகிறார். இந்தப் படம் கண்டிப்பாக விஜய்யின் கரியரில் முக்கியமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

மகிழ் திருமேனி பேட்டி: இந்நிலையில் அஜித்தை வைத்து விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கிய மகிழ் திருமேனி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில்,"நான் விஜய்யிடம் மொத்தம் மூன்று கதைகளை சொன்னேன். அந்த மூன்றுமே அவருக்கு பிடித்திருந்தது. அந்தக் கதைகளில் எதை தேர்வு செய்வது என்று தெரியாமல் விஜய் குழப்பத்திலேயே இருந்தார். நான் ஒரு கதையை தேர்வு செய்து இதை படமாக செய்யலாமா என்று கேட்டேன். உடனே அவரும் ஓகே சொல்லிவிட்டார்.

அட்வான்ஸ் வாங்கிவிட்டேன்: அந்தப் படத்தின் ஷூட்டிங் டேட்டுகள் கொஞ்சம் இடித்தன. அந்த சமயத்தில் வேறொரு படத்துக்காக உதயநிதி ஸ்டாலினிடம் நான் அட்வான்ஸை வாங்கிவிட்டேன். எனவே நான் உதயநிதி ஸ்டாலினின் படத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விஜய்க்கு சொல்லப்பட்ட மூன்று கதைகளுமே இப்போதும் இருக்கிறது" என்றார்.முன்னதாக மகிழ் இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X