விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல்.. உச்சக்கட்ட ஆச்சரியத்தில் அஜித் ரசிகர்கள்.. இப்பவாது நடக்குமா?

சென்னை: விடாமுயற்சி படத்தினுடைய ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அதில் அஜித், திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு ஷூட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது சென்னையில் படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்துவருகிறது. அஜித்துக்கு சிறிய அறுவை சிகிச்சையும் முடிந்திருக்கிறது. அடுத்தக்கட்ட ஷுட்டிங்கிற்கான லொக்கேஷன் தேடும் பணியும் நடந்துவருகிறது. இந்த சூழலில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதோடு சரி; படத்திலிருந்து வேறு எந்தவிதமான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vidaamuyarchi First Look Will Be out Tommorrow here are the details

அஜர்பைஜான் ஷூட்டிங்: அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்வரை அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவந்தது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்தனர். மங்காத்தா படத்துக்கு பிறகு அஜித் - திரிஷா - அர்ஜுன் கூட்டணி இதில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். படத்தின் ஷூட்டிங்கின்போது மிலனின் உயிரிழப்பு உள்ளிட்ட சோக சம்பவங்கள் நடந்தாலும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

முதல் ஷெட்யூல் ஓவர்: அஜித் அஜர்பைஜானிலிருந்து சென்னை வந்து மீண்டும் அங்கு சென்று நடித்துக்கொடுத்தார். ஏறத்தாழ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு காரணம்; எக்கச்சக்க செலவை மகிழ் திருமேனி இழுத்துவிட்டதுதான் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிய காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

அடுத்தது எங்கே:தற்போது படக்குழு சென்னையில் இருக்கிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங்கும் மீண்டும் அஜர்பைஜானிலேயே நடக்கலாம் என்று தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க முழு உடல் பரிசோதனைக்கு சென்ற அஜித்திற்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது தெரியவர லேசான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது அவர் முழு உடல்நலத்துடன் இருக்கிறார். இருந்தாலும் அவர் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

ஃபர்ஸ்ட் லுக்: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது ஷூட்டிங் தொடங்க கொஞ்சம் கால தாமதம் ஆக வாய்ப்பிருப்பதாக இந்த கேப்பில் படத்தின் முதல் அப்டேட்டை வெளியிட்டுவிடலாம் என்று மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு அஜித் மற்றும் லைகா தரப்பு ஒத்துக்கொண்டதாகவும் திரைத்துறையிலிருந்து முணுமுணுப்புகள் கேட்கின்றன. இருந்தாலும் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாவது எவ்வளவு சாத்தியம் என்று உறுதியாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X