விடாமுயற்சிக்கு நெட்ஃப்ளிக்ஸால் வந்த சோதனை?.. 70 கோடி ரூபாய்க்கு ஆப்பா?.. என்ன நடக்கப்போகுதோ?

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் முடிந்த சூழலில்; நீண்ட காலம் கழித்து மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர் ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

OTT Vidaamuyarchi Ajith

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது. இதற்கிடையே அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

குட் பேட் அக்லி: இதனையடுத்து உடல்நலம் தேறினார். பிறகு, ஏகேவின் ரசிகர்கள் விடாமுயற்சி பற்றிய அப்டேட்டை எதிர்பார்த்திருந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காதவகையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் ஷூட்டிங்கும் மும்முரமாக நடந்துவருகிறது. இருந்தாலும் விடாமுயற்சியின் நிலைமை என்னதான் ஆனது என்ற கவலை ரசிகர்களிடையே இருந்தது.

மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால் போஸ்டரை பார்த்த ரசிகர்களோ, எதிர்பார்த்த அளவுக்கு இல்லையே என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்தனர். மேலும், படமானது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஆனால் நேற்று ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அஜித்குமார் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

புதிய சிக்கல்?: விரைவில் அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு திரும்பவிருக்கிறார். அதுவரை மற்ற போர்ஷன்களை மகிழ் திருமேனி படமாக்குவார். இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி விடாமுயற்சியின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் வாங்கியிருக்கிறது.

மொத்தம் 70 கோடி ரூபாய் கொடுத்து படத்தை வாங்கியிருக்கும் அந்த நிறுவனம், அக்டோபர் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு ஸ்ட்ரீம் செய்ய வசதியாக இருக்கும்; அப்படி அக்டோபரில் படம் ரிலீஸாகவில்லை என்றால் 70 கோடி ரூபாயை திருப்பி தர வேண்டும் என படக்குழுவுக்கு கண்டிஷன் வைத்திருப்பதாக பரபர தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X