32 வருடங்கள் நிறைவு.. போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த விடாமுயற்சி படக்குழு
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி அஜர்பைஜான் நாட்டில் வைத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. அங்கு பெரும்பாலான காட்சிகள் மும்முரமாக படமாக்கப்பட்டன. ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.
செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட இந்த லுக்கிற்காகவே இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் விடாமுயற்சிக்கு காத்திருக்கலாம் என்று கமெண்ட்ஸ் செய்தனர்.
குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்களும் வெளியாகி சக்கைப்போடு போட்டன. இந்தப் படமானது அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு அஜித் அருமையாக நடனம் ஆடியிருக்கிறார் என்று சமீபத்தில்கூட இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
32 வருடங்கள் ஓவர்: இந்நிலையில் அஜித்குமார் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 32 வருடங்கள் நிறைவடைந்து இருக்கின்றன. எனவே அவருக்கு பலரும் வாழ்த்து சொல்லிவருகிறார்கள். அந்தவகையில் விடாமுயற்சி படத்திலிருந்து புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்.. யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி" என்று குறிப்பிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











