விஷால் வழியில் தயாரிப்பிலும் குதித்த விதார்த்!

By Shankar

இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கும் விஷால்தான் முன்னோடியாகத் திகழ்கிறார். பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு விஷால் எடுக்கும் முடிவுகளில் அத்தனை தன்னம்பிக்கை.

அவரை மனதில் வைத்தோ என்னமோ, நடிகர் விதார்த்தும் தயாரிப்பில் குதித்துள்ளார்.

Vidarth enter film production

சமீபத்தில் வெளியான அவரது படங்கள் பட்டையைக் கிளப்பணும் பாண்டியா, ஆள் போன்றவை நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தன. அடுத்து அவர் காடு, குற்றமும் தண்டனையும் படங்களில் நடிக்கிறார்.

இதில் இரண்டாவது படத்தை தனது சொந்த நிறுவனமான ‘டான் பிலிம்ஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் விதார்த். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை பூஜா நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தை தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள ‘காக்கா முட்டை' படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். மணிகண்டன் இயக்கியுள்ள ‘காக்கா முட்டை' படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X