எனக்கு அந்த சான்ஸே கிடைக்கல.. அஜித், தனுஷை நினைத்து ஃபீல் செய்யும் விக்னேஷ் சிவன்.. இப்படி புலம்புறாரே

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எல்ஐகே திரைப்படம் கடந்த பத்தாம் தேதி ரிலீஸானது. இதுவரை அப்படம் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டுக்கு இது ரொம்பவே குறைவுதான். முக்கியமாக அஜித் படம் மிஸ் ஆனபோது வந்த கிண்டல்களுக்கு எல்லாம் இந்தப் படத்தின் வெற்றி மூலம் பதிலடி கொடுக்க நினைத்திருந்தார் விக்கி. ஆனால் படம் சுமார் வெற்றியையே பெற்றிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்த ராசியோ என்னமோ தெரியவில்லை; அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் இரண்டாம் பாதி பிடிக்காததால் அதிலிருந்து அவரை வெளியேற்றியது தயாரிப்பு நிறுவனம். அவருக்கு பதிலாகத்தான் மகிழ் திருமேனி இயக்கினார். அஜித் படம் மிஸ் ஆனதை வைத்து ஒருதரப்பினர் தொடர்ந்து விக்னேஷ் சிவனை கிண்டல் செய்துவந்தார்கள். இனிமேலும் அவரால் திரைத்துறையில் நீடிக்க முடியாது என்றும் பேசினார்கள்.

Vignesh Shivan on Dhanush Rift Ajith Film Miss amp amp LIK Box Office Disappointment
Photo Credit:

எல்ஐகே விக்னேஷ் சிவன்: எப்படியாவது தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற முடிவோடு பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே படத்தை இயக்கினார். இதில் பிரதீப்புடன் க்ரித்தி ஷெட்டி, சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கடந்த பத்தாம் தேதி ரிலீஸான படம் எல்லோரையும் கவரவில்லை. படத்தில் சிஜே வேலைகளை தவிர்த்து எதுவும் சரியாக இல்லை என படம் பார்த்த ரசிகர்கள் நொந்துகொண்டார்கள். இதன் காரணமாக படத்தின் வசூலும் மோசமான நிலைமையில்தான் இருக்கிறது. பிரதீப்புக்கு ஹீரோவாக இந்தப் படம் சறுக்கல்தான்.

தனுஷுடன் பிரச்னை: எல்ஐகேவின் தோல்வி விக்கியை கொஞ்சம் அப்செட் ஆக்கவே செய்திருக்கும். ஏனெனில் அஜித் படம் மிஸ் ஆனதோடு மட்டுமின்றி நயன்தாரா ஆவணப் பட விவகாரத்தில் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜ் பயன்படுத்திய விவகாரத்தில் தனுஷுடனும் விக்கிக்கு முட்டிக்கொண்டது. இத்தனைக்கும் நானும் ரௌடிதானுக்கு முன்பு தனுஷ்தான் விக்னேஷ் சிவனை பார்த்துக்கொண்டார். ஆனால் அந்தப் பிரச்னை வந்துவிட்டது. மேலும் தனுஷுக்கு எதிராக நயன் வெளியிட்ட அறிக்கையைகூட விக்கிதான் எழுதி கொடுத்தார். அவர் நன்றி கெட்டவர் என்றெல்லாம் பலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

விக்னேஷ் சிவன் பதில்: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு அவர் கொடுத்திருந்த பேட்டியில், "நடிகர் தனுஷ் வாழ்க்கையில் நான் அதிகம் மதிக்கக்கூடிய நபர். அவருடனான நட்பை இழந்தது எனது வாழ்வில் மிகப்பெரிய இழப்பு ஆகும். அதை ஒரு அவமானமாகவும் கருதுகிறேன். எனது தந்தை இறந்த நாளில்தான் தனுஷ் பிறந்தநாள். அவரை நான் என் அப்பா மாதிரி பார்க்கிறேன். இரண்டு வருடங்கள் எப்போதுமே அவருடனேயே இருந்தேன். அவர் சாப்பிடும்போது சாப்பிட்டேன். தூங்கும்போது தூக்கினேன். அவர் மீதான அன்பும், மதிப்பும் எப்போதும் அப்படியேத்தான் இருக்கும்" என்றிருந்தார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "எனக்கும் தனுஷுக்கும் இடையே என்ன பிரச்னை என்று எனக்கே தெரியவில்லை. அஜித்தும், தனுஷும் பெரிய நட்சத்திரங்கள். அதனால் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. என்னால் எதையும் முடிவு செய்ய முடியாது. ஆனால் அவர்களிடம் நான் எப்போதும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பேன். அவர்களை சமாதானப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" என்றார். இந்தப் பேட்டிதான் இப்போது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X