»   »  விக்னேஷிடம் மோசடி

விக்னேஷிடம் மோசடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆச்சாரியா படத்தை வினியோகம் செய்ததில் உதயம் தியேட்டர் பங்குதாரர்தங்களிடம் ரூ. 65 லட்சம் நிதி மோசடி செய்துவிட்டதாக அந்தப் படத்தில் உயிரைக்கொடுத்து நடித்த விக்னேஷ் புகார் தந்துள்ளார்.

விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ராஜா ஆகியோர் போலீஸ் கமிஷனர் லத்திகாசரணிடம் நேற்று அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது,

நாங்கள் ஐடிஏ பிலிம்ஸ் என்ற படக் கம்பெனியை தொடங்கி ஆச்சார்யா படத்தைதயாரித்தோம். இதற்காக ஏழுமலை என்பவரிடம் ரூ. 54 லட்சம் கடன் வாங்கினோம்.

இதனால் அவரது பெயிரில் படத்தை வெளியிட்டோம். தமிழகம் முழுவதும்வினியோகம் செய்யும் உரிமையை உதயம் தியேட்டரின் பங்குதாரர் மந்திரம்என்பவருக்கு வழங்கினோம்.

இதற்காக ரூ. 65 லட்சம் தருவதாகக் கூறினார். படம் வெளியாகி 20 நாட்கள் ஆனபின்னரும் பணம் தரவில்லை. கடந்த 20 நாட்களில் மட்டும் ரூ. 30 லட்சம்வசூலாகியுள்ளது. இது குறித்து கேட்டால் எங்களை ஏமாற்றுகிறார்.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.இதுகுறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு லத்திகாஉத்தரவிட்டுள்ளார்.

மிக நீண்ட காலமாக பிரேக்குக்காக ஏங்கி வரும் விக்னேஷ் மிகுந்த சிரமப்பட்டுகாசைப் புரட்டி, நண்பர்களை வைத்து தயாரித்த படம் ஆச்சாரியா. மிகச் சிறப்பானவந்துள்ள இந்தப் படம் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளது.

நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை மிகவும் நம்பியிருக்கிறார்விக்னேஷ். இந் நிலையில் இப்படி ஒரு சிக்கல்.

ஒரு காலத்தில் இயக்குனர் பாலாவின் ரூம் மேட்டான விக்னேஷ் தான் சேது படத்தில் விக்ரமின் கேரக்டரைசெய்ய இருந்தவர். ஆனால், அது அமையாமல் போய்விட்டது. அந்த சோகம் விக்னேஷிடம் இப்போதும் உண்டு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil