twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடுத்தெருவில் நிற்கிறேன்: நடிகர் விக்னேஷ் கவலை

    By Siva
    |

    சென்னை: ஒரேயொரு வெற்றியை எதிர்பார்த்து நடுத்தெருவில் நிற்கிறேன் என்று நடிகர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

    1990ம் ஆண்டு வெளியான அவங்க நம்ம ஊரு பொண்ணுங்க என்ற படம் மூலம் கோலிவுட் வந்தவர் விக்னேஷ். 24 ஆண்டுகள் சினிமாவில் உள்ளார். ஆனாலும் அவர் பெயர் சொல்லும் அளவுக்கு வெற்றி பெறவில்லை.

    பாலா இயக்கிய சேது படத்தில் விக்னேஷை தான் நடிக்க கேட்டனர். ஆனால் டேட்ஸ் இல்லாததால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அந்த படத்தில் விக்ரம் நடித்து பெயரும், புகழும் பெற்றார்.

    வெற்றி

    வெற்றி

    விக்னேஷுக்கும், வெற்றிக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. இந்நிலையில் தான் ஒரு வெற்றி கிடைத்துவிடாதா என்ற நினைப்பில் படம் தயாரிக்கிறார்.

    சேமிப்பு

    சேமிப்பு

    விக்னேஷ் தனது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் போட்டு அவன் அவள் படத்தை தயாரிக்கிறார். சேமிப்பை செலவு செய்வதால் அவருடன் அவருடைய மனைவி பேசுவதை நிறுத்திவிட்டாராம்.

    தோல்விகளே

    தோல்விகளே

    சினிமா வாழ்க்கையில் எனக்கு அதிக தோல்விகள் ஏற்பட்டன. மொட்டை அடித்தேன், ஏன் நிர்வாணமாகக் கூட நடித்தேன். ஆனால் வெற்றி மட்டும் கிடைக்கவில்லை என்றார் விக்னேஷ்.

    மனைவி

    மனைவி

    என் மனைவி என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நான் எடிட்டிங் ஸ்டுடியோவில் தான் தங்கியுள்ளேன். வீடு, வாசல், மனைவி இருந்தும் நடுத்தெருவில் நிற்கிறேன் என்று விக்னேஷ் தெரிவித்தார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    அவன் அவள் படத்தை தமிழக ரசிகர்கள் ஹிட்டாக்கி தான் இழந்த அனைத்தையும் திருப்பிக் கொடுப்பார்கள் என்று நம்புகிறார் விக்னேஷ்.

    English summary
    Vignesh has spent his life savings to produce Avan Aval expecting victory.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X