ரீ ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. சம்மரில் காமெடி கலக்கலாக வரும் சச்சின்.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரு!

சென்னை: ஆளவந்தான், தீனா, கில்லி, தளபதி, முத்து போன்ற படங்களில் கடந்தாண்டு தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது, அதேபோன்று கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன், ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன்ஆப் மகாலட்சுமி போன்ற படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இதற்கு இயக்குநர் மோகன் ராஜா ரசிகர்கள ஆதரவு தர வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். தற்போது விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் சச்சின் படத்தின் ரீ ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனால், மீண்டும் திரையில் சச்சின் படத்தை கொண்டாட தயாராகியுள்ளனர்.

சச்சின் என்றதுமே மெல்லிய புன்னகை வந்து விடும். அந்த பெயரில் அப்படி ஒரு மேஜிக் இருக்கிறது என்றே கூறலாம். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 50 சதங்களுக்கு மேல் அடித்தாலும் சரி, கிளீன் போல்ட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினாலும் சரி சின்ன ஸ்மலில் ரசிகர்களை கவர்ந்துவிடுவார். சோகத்தை மறக்க சிரிப்பு தானே மருந்து. அதே போன்று படம் முழுக்க கலர்புல்லான காமெடியும் காதலும் இருந்தால் பார்த்து ரசித்து கொண்டாடலாம். அப்படிப்பட்ட படம் தான் சச்சின். விஜய் கரியரில் சுமாரான வரவேற்பை தந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் சச்சினும் இருக்கிறது.

vijas-sachin-re-release-date-announce

லெஜண்ட்ரி இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கிய முதல் படம் தான் சச்சின். முன்னதாக இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது குறித்த செய்தி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்களும் காத்திருந்தனர். காரணம் விஜய் அரசியலில் இறங்கி அடித்து கொண்டிருக்கிறார். அவரது கடைசிப்படம் ஜனநாயகன் என கூறப்படுகிறது. இதனால், அவரது சினிமா ரசிகர்கள் சோகத்தை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கின்றனர். அரசியலில் இருந்தாலும் அவர் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

vijas-sachin-re-release-date-announce

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு எதை செய்தாலும் வித்தியாசமான முறையில் படங்களுக்கு விளம்பரத்தை செய்வார். அவர் தயாரிக்கும் படங்களின் வரிசையில் ஹிட் படங்கள் ஏராளம். அந்த வகையில் சச்சின் படத்தை திரையில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறார். இந்நிலையில், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி சச்சின் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார். தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்தாண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட மற்ற படங்களை காட்டிலும் கில்லி 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று சச்சின் திரைப்படமும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய தலைமுறை பார்க்க தவறிய படமாக இருக்கும் சச்சினை கண்டிப்பாக கொண்டாட தயாராக இருப்பார்கள். கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சியை தரும் காதல் கொண்டாட்டமான சச்சின் வர இருப்பது மகிழ்ச்சிதான் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். திரையில் வடிவேலு காமெடியை மிஸ் பண்ணும் ரசிகர்களுக்கு சிறப்பான காமெடி விருந்து காத்திருக்கிறது. மதுர, வசீகரா போன்ற படங்களின் வரிசையில் இப்படத்திலும் விஜய் - வடிவேலு காம்போ பெரிய அளவில் பேசப்பட்டது. என்ன அய்யச்சாமி வர்ரட்டா என்பதும், ஜெனிலியாவை கலாய்ப்பது போன்ற காட்சிகள் ரகளையை ஏற்படுத்தும். ஏப்ரல் 18ல் ரீ ரிலீஸ் தேதி குறிச்சாச்சு வந்துடுங்க ம்க்கா என ரசிகர்கள் ட்வீட் போட்டு வரவேற்க தொடங்கிவிட்டனர்.

FAQs
சச்சின் படத்தில் ரகுவரன் நடித்த கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன?

கவுதம் சிங்கானியா

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X