»   »  விஜய் படத்திற்கு புது சிக்கல்!

விஜய் படத்திற்கு புது சிக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் படங்களுக்கு இனிமேல் ஒத்துழைப்பு தர மாட்டோம்,திரையிட மாட்டோம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் போட்டுள்ளதால்விஜய்யின் போக்கிரி படத்திற்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜய் நடித்து வெளியான படம் ஆதி. இந்தப் படம் சென்னையில் ஒரு நாள் தாமதமாக படம் வெளியானதால்வசூலில் பெரும் அடி விழுந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்கஉரிமையாளர்கள் நஷ்ட ஈடு கோரி விஜய் தரப்பை அணுகினர்.

ஆனால் நஷ்ட ஈடெல்லாம் தர முடியாது, போய்ட்டு வாங்க என்று கூறி எஸ்.ஏ.சந்திரசேகரன் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் கடுப்பான திரையரங்க உரிமையாளர்கள், விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரன் படங்களுக்குஒத்துழைப்பு தர மாட்டோம் என போர்க்கொடி உயர்த்தினர்.

பின்னர் சமரசப் பேச்சுவார்த்தை நடந்து பிரச்சினை அப்போதைக்கு அடங்கியது. இந்த நிலையில் மறுபடியும்திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

விஜய் நடித்து வரும் போக்கிரி பொங்கலுக்கு திரையிடப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்கஉரிமையாளர்கள் சங்க பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், ஆதி பட விவகாரம் தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைதோல்வி அடைந்து விட்டது. எனவே தொழில் ரீதியாக விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் படங்களுக்குஇனிமேல் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால் போக்கிரி படத்தை திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆதி படத்தால் ஏற்பட்ட இழப்பை விஜய்தரப்பு சரி செய்தால்தான் அடுத்து விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என தியேட்டர்உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Read more about: vijays film in trouble

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil