For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சந்திரமுகியை முந்தியதா போக்கிரி?விஜய் விடும் கரடி!

  By Staff
  |

  சந்திரமுகி பட வசூலை போக்கிரி முந்தி விட்டதாக விஜய்யும், அவரது பத்திரிக்கைத் தொடர்பாளர்பி.டி.செல்வக்குமாரும் கரடி விட்டுள்ளனர்.

  கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் படு சூடாக உலா வரும் ஒரு தகவல், சந்திரமுகி வசூலை விஜய்யின்போக்கிரி பட வசூல் முந்தி விட்டது என்பதுதான். இந்த காமெடியான செய்தி படு சீரியஸாக பரவிவருவதுதான் வேடிக்கை. இதை விஜய்யும் மறுக்காமல் அமைதிப் புன்னகை புரிந்தது அதை விட பெரியகாமெடி.

  20 வருடங்களாக சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர் ரஜினிகாந்த். அவரது படம் வெளியாகும்நாள் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, திரையுலகுக்கும் தனிப் பெரும் கொண்டாட்டமாக அமைகிறது.

  காரணம், ரஜினி படம் என்றால் அதில் பலருக்கும் நடிக்க, பணியாற்ற வேலை கிடைக்கிறது.பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதால் ரஜினி படம் குறித்த அறிவிப்புவெளியாகும்போது திரையுலக தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

  அதேபோல, பட விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் சந்தோஷமாகி விடுகின்றனர்.ரசிகர்களுக்கோ பெரும் விருந்து என்ற உற்சாகம்.

  இப்படி சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் சக்தியாக (பாபாவை விட்டு விடுவோம்!) ரஜினிவிளங்குகிறார். அவரது படங்களிலேயே சந்திரமுகிதான் பெரும் வசூலை அள்ளிய படம். மேலும் சென்னைசாந்தி தியேட்டரில், பகல் காட்சியாக 666வது நாள் ஓடியுள்ளது (சிவாஜி குடும்பத்தினரால் ஓட்டப்பட்டதுஎன்பதே சரி)

  தமிழ்ப் பட வரலாற்றில் சந்திரமுகி மிகப் பெரிய சாதனையை படைத்த படமும் சந்திரமுகி தான். ரஜினி படவசூலை ரஜினி படம்தான் முறியடிக்க முடிகிறது. அவருக்கு அவரேதான் போட்டியாக உள்ளார்.

  முன்பு படையப்பாவின் வசூல் சாதனையை விஜயகாந்த்தின் வானத்தைப் போல படம் முறியடித்ததாக பேச்சுஎழுந்தபோது அதை மறுத்தார் இயக்குநர் விக்ரமன். படையப்பா வசூலை அவ்வளவு சீக்கிரம் மிஞ்ச முடியாதுஎன்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் விக்ரமன்.

  அவர் சொன்னதைப் போலவே படையப்பாவின் வசூலை சந்திரமுகிதான் மிஞ்ச முடிந்தது.

  இப்போது போக்கிரி விவகாரத்திற்கு வருவோம். ஜனவரி 14ம் தேதி போக்கிரி வெளியானது. ஆரம்பத்தில்பெரும் பணப் பற்றாக்குறையுடன்தான் போக்கிரி ரிலீஸ் ஆனது. படம் தயாரிப்பில் இருந்தபோது, புதியபடங்கள் வெளியீட்டின்போது தியேட்டர் உரிமையாளர்கள் தங்களது இஷ்டப்படி கட்டணங்களைநிர்ணயிக்கலாம் என்ற தமிழக அரசின் பழைய உத்தரவு அமலில் இருந்தது.

  இதனால் போக்கிரி யூனிட்டும் வசூலை அள்ள ஆவலாக காத்திருந்தது. ஆனால் முதல்வர் கருணாநிதி இதற்குமுட்டுக்கட்டை போட்டு விட்டார். தியேட்டர் கட்டணங்களை அதிரடியாக குறைத்து அவர் அறிவித்தது விஜய்தரப்புக்கு பேரிடியாக அமைந்தது.

  பழைய முறைப்படி படம் ரிலீஸாவதாக இருந்தால், முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட் கட்டணத்தை 250 வரைஏற்றி வைத்து வசூலை அள்ளி, பார்த்தீர்களா வசூல் சாதனையை என்று கூறி விடுவார்கள்.

  ஆனால் மதல்வ>ன் அறிவிப்பால் அது சாத்தியம் இல்லை என்பதால் போக்கிரி படத்தை அதிக விலை கொடுத்துவாங்க விநியோகஸ்தர்கள் தயங்கினர். ஆனால் விலையைக் குறைக்க தயாரிப்பாளர் தரப்பு தயங்கியது.

  இதனால் படத்தை விற்பதில் சுணக்கம் காணப்பட்டது. இதையடுத்து அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனைக் கூட்டிக் கொண்டு முதல்வரைப் போய் ரகசியமாக சந்தித்தார் விஜய். தியேட்டர்கட்டணத்தை மறுபடியும் பழைய முறைக்கே மாற்ற வேண்டும் என்று கோரினார். ஆனால் அதை கருணாநிதிஏற்கவில்லை.

  இதையடுத்து வேறு வழியின்றி முன்பு சொன்ன ரேட்டிலிருந்து இறங்கித்தான் போக்கிரியை விற்றனர். இதனால்தயாரிப்பு தரப்புக்கு கொஞ்சம் நஷ்டம் தான் ஏற்பட்டதாம்.

  இந் நிலையில் போக்கிரிக்கு முதல் சில நாட்கள் வசூல் பெரிய அளவில் இல்லை. ஆனால் படம் குறித்தவிமர்சனங்கள் பாசிட்டிவாக வெளியாக ஆரம்பித்ததால், கூட்டம் வர ஆரம்பித்தது, இப்போது பொங்கல்படங்களில் முதலிடத்தில் உள்ளது போக்கிரி. அடுத்த இடத்தை தாமிரபரணி பெற்றுள்ளது. ஆழ்வார் டங்குவார்அந்து போய் விட்டது.

  இந்த நிலையில்தான் விஜய்யின் பி.ஆர்.ஓவான செல்வக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். கூடவேவிஜய்யும் வந்திருந்தார். செய்தியாளர்களிடம் செல்வக்குமார் பேசுகையில், போக்கிரி மெகாஹிட் படம்என்றார். அத்தோடு நில்லாது, சந்திரமுகி வசூலை மிஞ்சி விட்டது என்று அடுத்த குண்டைப் போட்டார்.

  படம் வெளியான 30 நாட்களிலேயே படம் சந்திரமுகி வசூலை முந்தி விட்டதாக செல்வக்குமார் கூறியபோதுசெய்தியாளர்கள் அதிர்ந்து விட்டனர். காரணம் சந்திரமுகியின் வசூலை சிவாஜியால் கூட மிஞ்ச முடியுமா என்றுபேச்சு எழுந்துள்ள நிலையில், கட்டணக் குறைப்புக்குப் பின்னர் வெளியான போக்கிரி எப்படி மிஞ்சியது என்றகுழப்பமான ஆச்சரியம் நிருபர்களுக்கு.

  அருகே அமர்ந்திருந்த விஜய் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழக்கமான மெளனப் புன்னகையைஉதிர்த்தபடி இருந்தார்.

  ஏற்கனவே ஆதி படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து தியேட்டர் உரிமையாளர்கள் இன்னும் மீளவில்லை.அதற்கு அவர்கள் கேட்ட நஷ்ட ஈட்டை விஜய் தரவே இல்லை. டபாய்த்து விட்டதாக குமுறிக் கொண்டுள்ளனர்.

  இதையடுத்து அடுத்த படத்தில் (போக்கிரியில்) நஷ்டத்தை சரி செய்வதாக விஜய் தரப்பு விநியோகஸ்தர்கள்,தியேட்டர் உரிமையாளர்களுக்கு வாக்கு கொடுத்திருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையாம்.

  இதனால் அதிருப்தியடைந்த போக்கிரி விநியோகஸ்தர்கள், கூட்டமாக சனிக்கிழமை காலை தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்து ராம. நாராயணனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

  ஆதி நஷ்டத்தை சரி செய்ய விஜய்யுடன் பேசி சமரசம் ஏற்படுத்துமாறு ராம. நாராயணனை அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த முழுப் பூசணிக்காயை அப்படியே லபக்கென மூடி மறைத்து விட்டு சந்திரமுகியைமுந்திருச்சுப்பா போக்கிரி என்று டகாலடி அடித்துள்ளார் செல்வக்குமார்.

  இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பார்கள். அதுதான் போக்கிரி விஷயத்திலும் நடந்துள்ளதுஎன்கிறார்கள்.

   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X