»   »  என் பதட்டம் குறைத்த போக்கிரி

என் பதட்டம் குறைத்த போக்கிரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

போக்கிரி படத்தின் வெற்றி எனது பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் குறைத்து விட்டது. ஆதி படத்திற்குப்பிறகு சில நிகழ்ச்சிகள் நடந்து விட்டன. ஆனால் இப்போது வினியோகஸ்தர்கள் பக்கமிருந்து சந்தோஷசெய்திகள் வந்து கொண்டுள்ளன என்கிறார் விஜய்.

நீண்ட நாட்களுக்குப் பின் நிருபர்களுடன் சகஜமாக உரையாடினார் விஜய். அவர் கூறுகையில்,

எனக்கு தெலுங்கு, இந்திப் படங்களில் நடிக்க நிறைய முறை வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் ஏற்கவில்லை.இனிமேலும் தமிழைத் தவிர வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை ஏற்கப் போவதில்லை.

தமிழ்தான் எனது உலகம், அதுதான் வசதியானதும் கூட. பிற மொழிகளில் அன்னியன் போல நுழைய நான்தயாராக இல்லை. எனது படங்கள் பிற மொழிகளில் டப் செய்து வெளியாகி, வெற்றி பெற்றால் கூடுதல்சந்தோஷம்தான் என்றார்.

அழகிய தமிழ் மகன் படம் ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவியதாமே?

அப்படியெல்லாம் இல்லை. இது இயக்குநர் பரதனின் சொந்தக் கதைதான்.

பிரபு தேவாவுடனான அனுபவம்?

அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நிறைய உழைத்தார். என்னையும் படம் இயக்குமாறு கூறினார்.ஆனால் இப்போதைக்கு அந்த ஐடியாவே கிடையாது என்று மறுத்து விட்டேன்.

அழகிய தமிழ்மகன் படத்தின் நாயகிகள் விஷயத்தில் அடிக்கடி மாற்றம் வருகிறதே?

எல்லாம் நல்ல மாற்றத்திற்காகத்தான்.

ஸ்டாலின் மகன் உதயநிதி தயா>க்கும் படத்தில் நடிக்கிறீர்களா.?

பேச்சு நடந்து வருகிறது. முடிந்ததும் அவர்களே அறிவிப்பார்கள்.

இப்படத்திற்கு தேதி கேட்டு பிரஷர் ஏதாவது வந்ததா?

அப்படியெல்லாம் எந்த பிரஷரும் வரவில்லை.

ஆக்ஷன் படங்களிலேயே நடிக்கிறீர்களே, போர் அடிக்கலையா?

அப்படியெல்லாம் இல்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. ஆக்ஷன் ஹீரோக்களுக்குத்தான் உலகில்சீக்கிரம் அங்கீகாரம் கிடைக்கிறது. ஆக்ஷன் ஹீரோ ஆக வேண்டும் என்பது எனது லட்சியமும் கூட. திருமலை,கில்லி, மதுர ஆகிய படங்களில் அது நிறைவேறியது.

இந்தப் படங்களுக்கு பெண்களிடமிருந்தும் நிறைய வரவேற்பு கிடைத்தது. ஆக்ஷன் ஹீரோவுக்கு இது மிகவும்முக்கியம்.

மலையாளம், தெலுங்கு ரீமேக்கிலேயே தொடர்ந்து நடிக்கிறீர்கள். அதேபோல அந்த மாநிலத்தைச் சேர்ந்ததயாரிப்பாளர்களின் படங்களில்தான் அதிகம் நடிக்கிறீர்கள். ஏன்?

ஆஹா... அப்படியெல்லாம் இல்லை. இயல்பாக நடக்கிறது. திட்டமிட்டு எதுவும் நடப்பதில்லை. அடுத்துவரப்போகும் இரண்டு படங்களையும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான் தயாரிக்கப் போகிறார்கள்.

ரீமேக் படங்களில் நடிப்பதற்கு விசேஷமாக எந்தக் காரணமும் இல்லை. தயாரிப்பாளர்களுக்கும்,விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் வரக் கூடாது, சந்தோஷமாக இருக்க வண்டும் என்று நினைப்பவன் நான்.அதனால் ரீமேக் படங்களில் அதிகம் நடிக்கிறேன்.

முரட்டுக்காளை ரீமேக்கில் நடிக்கிறீர்களா?

அந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இன்னும் எதுவும்இறுதியாகவில்லை என்றார் விஜய்.

Read more about: vijay is a happy man

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil