விஜய் பட தடை: விலக்க கோரி மனு
விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் அப்பச்சன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விஜய், ஸ்ரேயா, நமிதா நடிக்க, அப்பச்சன் தயாரிக்க உருவாகும் படம் அழகிய தமிழ் மகன். இப்படத்தின் கதை தனது கதை என்றும், அதற்காக தனக்குத் தருவதாக கூறிய ரூ. 5 லட்சம் பணத்தில் ரூ. 4 லட்சம் பணத்தைத் தராமல் தயாரிப்பாளர் அப்பச்சன் ஏமாற்றி விட்டார் எனவும், மீதப் பணத்தைத் தராமல் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்று கோரி தயாரிப்பாளர் முகம்மது பரூக் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பச்சன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பரூக்குக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். கோடிக்கணக்கில் முதலீடு செய்து படத்தை எடுத்து வருகிறோம். இடைக்காலத் தடையால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அப்போது பரூக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுதொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
More from Filmibeat
actor azhagiya tamil magan அப்பச்சன் அழகிய தமிழ் மகன் உயர்நீதிமன்றம் க்கு சென்னை தடை நடிகர் மனு தாக்கல் முகம்மது பரூக் வழ விஜய் cinema complaint kollywood vijay


Click it and Unblock the Notifications











