மீண்டும் விஜய்-பிரபு தேவா

By Staff

போக்கிரி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யும், பிரபுதேவாவும் இணையவுள்ளனர்.

டான்ஸில் கலக்கும் விஜய்யும், டான்ஸ் மாஸ்டராகி பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்த பிரபுதேவாவும் இணைந்து கொடுத்த படம் போக்கிரி. இப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரபுதேவா மீண்டும் தெலுங்குக்குப் போய் விட்டார்.

அங்கு சிரஞ்சீவியை வைத்து சங்கர்தாதா ஜிந்தாபாத் என்ற படத்தை இயக்கினார். விஜய்யும், அழகிய தமிழ் மகன் படத்தில் நடிக்க வந்து விட்டார்.

ஆகஸ்ட் கடைசியில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையவுள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதை முடித்து விட்டு தரணி இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கப் போகிறார். அப்படத்தை மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கிறார். திரிஷாதான் விஜய்க்கு ஜோடி.

இந்தப் படத்தை முடித்து விஜய்யும், பிரபுதேவாவும் இணைந்து இன்னொரு படத்தைக் கொடுக்கவுள்ளனர். 2008ம் ஆண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் கதையை எந்தப் படத்திலிருந்தும் ரீமேக் செய்யவில்லையாம். மாறாக பிரபுதேவாவின் சொந்தக் கதையாம் இது.

ரீமேக் இயக்குநர் என்ற பெயரை மாற்றும் பொருட்டே இப்படி சொந்தச் சரக்கை எடுத்து விடவுள்ளாராம் பிரபுதேவா. சமீபத்தில் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் வைத்து கதை குறித்து இருவரும் டிஸ்கஸ் செய்துள்ளனர். கதை விஜய்க்குப் பிடித்துப் போனதால் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

இதற்கிடையே போக்கிரியின் இந்தி ரீமேக்கை சல்மான் கானை வைத்து எடுக்கவுள்ளார் பிரபுதேவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X