ஹீரோ .. ஹீரோ ..

By Staff

விஜய் நடிக்க இளையராஜா இசைமைக்க சேரன் இயக்கவுள்ள படத்தில் கோபிகா கதாநாயகியாகிறார்.

மைடியர் குட்டிச்சாத்தான் என்ற இந்தியாவின் முதல் 3டி படத்தை தயாரித்தவர் அப்பச்சன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில்அவர் பிரண்ட்ஸ் என்ற படத்தைத் தயாரித்தார்.

இளையராஜாவின் இன்னிசை, வடிவேலுவின் வெடிக் காமடி, விஜய், சூர்யாவின் நிறைவான நடிப்பு, நல்ல கதை ஆகிய பலகாரணங்களால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு மெகா ஹிட் படத்தைக் கொடுக்கவுள்ளது. போனஸாக வெற்றிப் பட இயக்குநர் சேரன்இப்புதிய படத்தை இயக்கவுள்ளார். படத்திற்கு டயரி என்று பெயர் வைத்துள்ளனர்.

விஜய், இளையாராஜா இணைந்து இதற்கு முன்பு காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் ஆகிய இரு சூப்பர் ஹிட்களைக்கொடுத்துள்ளனர். இந் நிலையில் டயரி படமும் அந்த வெற்றி வரிசையில் இடம்பெறும் என அப்பச்சன் நம்பிக்கைதெரிவித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக கோபிகா நடிக்கவுள்ளார். இன்னொரு ஜோடியும் விஜய்க்கு உண்டாம். சமீப காலமாக ஒரே அதிரடிபடங்களாக நடித்து வந்த விஜய், இந்தப் படத்தை தனது மன திருப்திக்கேற்ற வகையில் நடிக்க கிடைத்த அரிய வாய்ப்பாகநினைக்கிறாராம்.

எனவே தற்போது கைவசம் உள்ள திருப்பாச்சி, சச்சின் ஆகிய படங்களை முடித்து விட்டு டயரியில் முழு கவனத்தையும் செலுத்தப்போகிறார்.

சேரனும் தற்போது டூரிங் டாக்கீஸ் மற்றும் இன்னொரு படத்தில் பிசியாக உள்ளார். எனவே 2005ம் ஆண்டின் தொடக்கத்தில் டயரிபடப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

த்ரிஷாவுடன் விஜய் நடித்து வரும் திருப்பாச்சி படம் முடியும் தறுவாயில் உள்ளது. படத்தை இயக்கி வரும் பேரரசு, இயக்குநர்தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பதால் படம் சரியான மசாலாவாக வந்திருக்கிறதாம்.

இப்படி மசாலாப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறீர்களே, வித்தியாசமான வேடங்கள் செய்ய ஆசையில்லையா என்றுசீரியசாகக் விஜய்யிடம் கேட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு விக்ரம் போதுமே என்று சொல்லி அப்பாவியாக சிரித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X