உதயநிதியா?.. விஜய்யா?.. ஓபனாக போட்டுடைத்த இயக்குநர் மிஷ்கின்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த அரசியல் களம் உதயநிதி Vs விஜய் என மாறியிருக்கிறது. ஸ்டாலின் தோல்வியடைந்துவிட எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் பணியாற்றிவருகிறார். சட்டப்பேரவையில் உதய் பேசியதற்கும்; பேரவை முடிந்த பிறகு அவருக்கு விஜய் பதிலடி கொடுத்ததுமேகூட பெரிய விவாதமானது. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் விஜய். கட்சி ஆரம்பித்து சில வருடங்களிலேயே அவர் ஆட்சிக்கு வந்திருப்பது பெரிய அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. எம்ஜிஆருக்குகூட இப்படி ஒரு விஷயம் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். எனவே அவரால் சட்டப்பேரவைக்கு செல்ல முடியாத நிலைமை இருக்கிறது.

Vijay 100 Deserves This Position Mysskin s Viral Statement
Photo Credit:

உதய் Vs விஜய்: எனவே எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார். சட்டப்பேரவை தொடங்கியதும் அவர் பேசிய பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்கு சதவீதத்தையெல்லாம் சொன்ன அவர்; மாற்று கட்சி தலைவர்கள் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் ஷோஃபா செல்கிறது. புதிய மாற்றம் தரும் ஆட்சி இல்லை; புஷ்பா மாடல் ஆட்சி என்று விளாசினார். அவரது இந்தத் தாக்குதலுக்கு விஜய்யோ பேரவையிலேயே பதிலை சொல்லாமல்; வீட்டுக்கு சென்று பதிலளித்து ட்ரோல்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
விஜய் தங்கை பற்றி அறியாத பக்கங்கள்.. ஃபீலிங்கோடு சொன்ன அக்கா.. என்னவெல்லாம் நடந்தது?
விஜய் தங்கை பற்றி அறியாத பக்கங்கள்.. ஃபீலிங்கோடு சொன்ன அக்கா.. என்னவெல்லாம் நடந்தது?

இனி இப்படித்தான்: இனிமேல் தமிழ்நாடு அரசியல் களம் உதயநிதி Vs விஜய்யைத்தான் முன்னிறுத்தும் என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே திரைத்துறையில் இருக்கும்போதே அவர்கள் இரண்டு பேருக்குமிடையே பிரச்னை என்ற ஒரு தகவல் உண்டு. அதனை மறைமுகமாக ஒரு பேட்டியில் உதயும் சொல்லியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு அரசியல் களத்திலும் இரண்டு பேருக்குமிடையே போட்டி உருவாகியிருப்பது; புதிய அரசியல் அத்தியாயம் எழுதப்படுகிறது என்ற ரீதியிலேயே புரிந்துகொள்ள வேண்டியதாகியிருக்கிறது.

மிஷ்கின் பேட்டி: இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "விஜய் இந்த இடத்துக்கு 100 சதவீதம் தகுதியான ஆள்தான். நான் விஜய், உதயநிதி ஆகிய இரண்டு பேரிடமுமோ வேலை செய்திருக்கிறேன். ரொம்ப நெருங்கியும் பழகியிருக்கிறேன். இப்போதை அரசியல் நிலைமைகளை நான் பொது இடத்திலோ, எனது படங்களிலோ பேசியது இல்லை.அதை நான் ரொம்ப பெர்சனலான ஒன்றாக பார்க்கிறேன்.

பெரிய மிராக்கிள்: அதேசமயம் இப்போது நடந்திருப்பது ஒரு மிராக்கிள்தான். நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. இன்று மக்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். அதை நாம் வரவேற்க வேண்டும். ஒரு வருடத்துக்கு முன்புகூட அவரை லெஜண்ட் என சொன்னதற்குகூட எல்லோரும் எதிர்த்தார்கள். என்னுடன் பழகியவர்களுமே ஏன் அப்படி சொல்கிறாய் என்றுதான் கேட்டார்கள். இப்போது அவர்களுக்கு தெரிந்திருக்குமதானே" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X