»   »  விஜய்யின் புலி பாயாதது ஏன்? விஜய் நடிக்க, ஃபிரண்ட்ஸ் அப்பச்சன் தயாரிப்பில், எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகவிருந்த புலி கைவிடப்பட்டு விட்டது அல்லவா.? அது ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. விஜய்யின் மார்க்கெட் முன்பு அதல பாதாளத்தில் இருந்தபோது எஸ்.ஜே.சூர்யாவின் குஷிதான் விஜய்யைத் தூக்கி விட்டது. அதற்குப் பிறகு அவர் ஏறுமுகமாகவே உள்ளார். இந் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. அதுதான் புலி. படத்தின் கதையைக் கேட்ட விஜய், நடிக்க ஒத்துக் கொண்டார். தற்போதைய தனது மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப சில விஷயங்களை படத்தில் சேர்க்குமாறு அவர் சூர்யாவைக் கேட்டுக் கொண்டார். சூர்யாவும் ஒத்துக் கொண்டார். புலி படக் கதை தொடர்பாக சூர்யாவும், விஜய்யும் தீவிரமாக டிஸ்கஷன் செய்து வந்தனர். இந்த இடத்தில்தான் குழப்பம் ஏற்பட்டதாம். அதாவது, விஜய்யிடம் கதை குறித்து டிஸ்கஸ் செய்து வந்த சூர்யா, சைட் ட்ராக்கில் நடிகர் சிம்புவுடனும் புலி கதையை செம்மைப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார். சூர்யாவும், சிம்பவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரும் தங்களது படங்கள் குறித்து டிஸ்கஸ் செய்வது வழக்கம். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் கள்வனின் காதலி படத்தின் கதையையும் சிம்புவின் ஆலோசனையின் பேரில் பல மாற்றங்களை செய்துள்ளார் சூர்யா. அதேபோல சிம்புவின் வல்லவன் கதையிலும் சூர்யா சில யோசனைகளை கூறியுள்ளார். அந்த ரீதியில், புலி கதையிலும் சில மாற்றங்களை சொல்லியுள்ளார் சிம்பு. இதை சூர்யாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். புலி கதையில் சிம்பு ஊடுறுவுவது விஜய்யின் காதுகளுக்குப் போக கொதித்துவிட்டாராம் இளைய தளபதி. யார் படத்துக்கு யார் யோசனை சொல்வது என்று கொந்தளித்த தளபதி, உடனடியாக சூர்யாவைக் கூப்பிட்டார். எனது படத்தின் கதைக்காக நீங்கள் ரொம்பவும் சிரமப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. அந்த கஷ்டமே உங்களுக்கு வேண்டாம். நாம் புலியை படமாக்க வேண்டாம். வேறு ஒரு வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இதை எதிர்பார்க்காத சூர்யா, ஏன், என்னாச்சு என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய், எனது படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் என்று நானும், படத்தின் இயக்குனராகிய நீங்களும்தான் முடிவு செய்ய வேண்டும். சிம்புவுக்கு இங்க என்ன வேலை?. வேணும்னா அவர் படத்துக்கு நான் அட்வைஸ் தரவா என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் சூர்யா சூடாகி விட்டாராம். சிம்பு என்னோட பெஸ்ட் பிரண்ட். அந்த வகையில்தான் அவரிடம் ஆலோசனை கேட்டேன். இதில் எந்தத் தப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குப் பிடிக்காது என்பதற்காக சிம்புவிடம் நான் பேசாமல் இருக்க முடியாதே என்று கூலாக கூறியுள்ளார். இதற்கு பதில் சொல்லாத விஜய், ஒரு கும்பிடு மட்டும் போட்டு அனுப்பி வைத்துவிட்டாராம். அவ்வளவுதான், அத்தோடு முடிந்தது புலி. இப்போது எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடிக்க புலி பாயப் போகிறது. அதே அப்பச்சன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் வேறு ஒரு படம், வேறு ஒரு இயக்குனரின் கைவண்ணத்தில் தயாராகப் போகிறது. அந்தப் படத்தை பேரரசு அல்லது அவரது தம்பி முத்துவடுகு அல்லது புதுமுக இயக்குனர் உதயன் ஆகியோரில் ஒருவர் இயக்கக் கூடும் எனத் தெரிகிறது. சிம்புன்னாலே வம்புதான் போல..

விஜய்யின் புலி பாயாதது ஏன்? விஜய் நடிக்க, ஃபிரண்ட்ஸ் அப்பச்சன் தயாரிப்பில், எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகவிருந்த புலி கைவிடப்பட்டு விட்டது அல்லவா.? அது ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. விஜய்யின் மார்க்கெட் முன்பு அதல பாதாளத்தில் இருந்தபோது எஸ்.ஜே.சூர்யாவின் குஷிதான் விஜய்யைத் தூக்கி விட்டது. அதற்குப் பிறகு அவர் ஏறுமுகமாகவே உள்ளார். இந் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. அதுதான் புலி. படத்தின் கதையைக் கேட்ட விஜய், நடிக்க ஒத்துக் கொண்டார். தற்போதைய தனது மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப சில விஷயங்களை படத்தில் சேர்க்குமாறு அவர் சூர்யாவைக் கேட்டுக் கொண்டார். சூர்யாவும் ஒத்துக் கொண்டார். புலி படக் கதை தொடர்பாக சூர்யாவும், விஜய்யும் தீவிரமாக டிஸ்கஷன் செய்து வந்தனர். இந்த இடத்தில்தான் குழப்பம் ஏற்பட்டதாம். அதாவது, விஜய்யிடம் கதை குறித்து டிஸ்கஸ் செய்து வந்த சூர்யா, சைட் ட்ராக்கில் நடிகர் சிம்புவுடனும் புலி கதையை செம்மைப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார். சூர்யாவும், சிம்பவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரும் தங்களது படங்கள் குறித்து டிஸ்கஸ் செய்வது வழக்கம். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் கள்வனின் காதலி படத்தின் கதையையும் சிம்புவின் ஆலோசனையின் பேரில் பல மாற்றங்களை செய்துள்ளார் சூர்யா. அதேபோல சிம்புவின் வல்லவன் கதையிலும் சூர்யா சில யோசனைகளை கூறியுள்ளார். அந்த ரீதியில், புலி கதையிலும் சில மாற்றங்களை சொல்லியுள்ளார் சிம்பு. இதை சூர்யாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். புலி கதையில் சிம்பு ஊடுறுவுவது விஜய்யின் காதுகளுக்குப் போக கொதித்துவிட்டாராம் இளைய தளபதி. யார் படத்துக்கு யார் யோசனை சொல்வது என்று கொந்தளித்த தளபதி, உடனடியாக சூர்யாவைக் கூப்பிட்டார். எனது படத்தின் கதைக்காக நீங்கள் ரொம்பவும் சிரமப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. அந்த கஷ்டமே உங்களுக்கு வேண்டாம். நாம் புலியை படமாக்க வேண்டாம். வேறு ஒரு வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இதை எதிர்பார்க்காத சூர்யா, ஏன், என்னாச்சு என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய், எனது படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் என்று நானும், படத்தின் இயக்குனராகிய நீங்களும்தான் முடிவு செய்ய வேண்டும். சிம்புவுக்கு இங்க என்ன வேலை?. வேணும்னா அவர் படத்துக்கு நான் அட்வைஸ் தரவா என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் சூர்யா சூடாகி விட்டாராம். சிம்பு என்னோட பெஸ்ட் பிரண்ட். அந்த வகையில்தான் அவரிடம் ஆலோசனை கேட்டேன். இதில் எந்தத் தப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குப் பிடிக்காது என்பதற்காக சிம்புவிடம் நான் பேசாமல் இருக்க முடியாதே என்று கூலாக கூறியுள்ளார். இதற்கு பதில் சொல்லாத விஜய், ஒரு கும்பிடு மட்டும் போட்டு அனுப்பி வைத்துவிட்டாராம். அவ்வளவுதான், அத்தோடு முடிந்தது புலி. இப்போது எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடிக்க புலி பாயப் போகிறது. அதே அப்பச்சன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் வேறு ஒரு படம், வேறு ஒரு இயக்குனரின் கைவண்ணத்தில் தயாராகப் போகிறது. அந்தப் படத்தை பேரரசு அல்லது அவரது தம்பி முத்துவடுகு அல்லது புதுமுக இயக்குனர் உதயன் ஆகியோரில் ஒருவர் இயக்கக் கூடும் எனத் தெரிகிறது. சிம்புன்னாலே வம்புதான் போல..

Subscribe to Oneindia Tamil

விஜய் நடிக்க, ஃபிரண்ட்ஸ் அப்பச்சன் தயாரிப்பில், எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகவிருந்த புலி கைவிடப்பட்டு விட்டது அல்லவா.? அது ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

விஜய்யின் மார்க்கெட் முன்பு அதல பாதாளத்தில் இருந்தபோது எஸ்.ஜே.சூர்யாவின் குஷிதான் விஜய்யைத் தூக்கி விட்டது. அதற்குப் பிறகு அவர் ஏறுமுகமாகவே உள்ளார். இந் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. அதுதான் புலி.

படத்தின் கதையைக் கேட்ட விஜய், நடிக்க ஒத்துக் கொண்டார். தற்போதைய தனது மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப சில விஷயங்களை படத்தில் சேர்க்குமாறு அவர் சூர்யாவைக் கேட்டுக் கொண்டார். சூர்யாவும் ஒத்துக் கொண்டார்.

புலி படக் கதை தொடர்பாக சூர்யாவும், விஜய்யும் தீவிரமாக டிஸ்கஷன் செய்து வந்தனர். இந்த இடத்தில்தான் குழப்பம் ஏற்பட்டதாம். அதாவது, விஜய்யிடம் கதை குறித்து டிஸ்கஸ் செய்து வந்த சூர்யா, சைட் ட்ராக்கில் நடிகர் சிம்புவுடனும் புலி கதையை செம்மைப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.

சூர்யாவும், சிம்பவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரும் தங்களது படங்கள் குறித்து டிஸ்கஸ் செய்வது வழக்கம். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் கள்வனின் காதலி படத்தின் கதையையும் சிம்புவின் ஆலோசனையின் பேரில் பல மாற்றங்களை செய்துள்ளார் சூர்யா.


அதேபோல சிம்புவின் வல்லவன் கதையிலும் சூர்யா சில யோசனைகளை கூறியுள்ளார்.

அந்த ரீதியில், புலி கதையிலும் சில மாற்றங்களை சொல்லியுள்ளார் சிம்பு. இதை சூர்யாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். புலி கதையில் சிம்பு ஊடுறுவுவது விஜய்யின் காதுகளுக்குப் போக கொதித்துவிட்டாராம் இளைய தளபதி.

யார் படத்துக்கு யார் யோசனை சொல்வது என்று கொந்தளித்த தளபதி, உடனடியாக சூர்யாவைக் கூப்பிட்டார்.

எனது படத்தின் கதைக்காக நீங்கள் ரொம்பவும் சிரமப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. அந்த கஷ்டமே உங்களுக்கு வேண்டாம். நாம் புலியை படமாக்க வேண்டாம். வேறு ஒரு வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இதை எதிர்பார்க்காத சூர்யா, ஏன், என்னாச்சு என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய், எனது படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் என்று நானும், படத்தின் இயக்குனராகிய நீங்களும்தான் முடிவு செய்ய வேண்டும். சிம்புவுக்கு இங்க என்ன வேலை?. வேணும்னா அவர் படத்துக்கு நான் அட்வைஸ் தரவா என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்டதும் சூர்யா சூடாகி விட்டாராம். சிம்பு என்னோட பெஸ்ட் பிரண்ட். அந்த வகையில்தான் அவரிடம் ஆலோசனை கேட்டேன். இதில் எந்தத் தப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குப் பிடிக்காது என்பதற்காக சிம்புவிடம் நான் பேசாமல் இருக்க முடியாதே என்று கூலாக கூறியுள்ளார்.


இதற்கு பதில் சொல்லாத விஜய், ஒரு கும்பிடு மட்டும் போட்டு அனுப்பி வைத்துவிட்டாராம்.

அவ்வளவுதான், அத்தோடு முடிந்தது புலி. இப்போது எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடிக்க புலி பாயப் போகிறது.

அதே அப்பச்சன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் வேறு ஒரு படம், வேறு ஒரு இயக்குனரின் கைவண்ணத்தில் தயாராகப் போகிறது. அந்தப் படத்தை பேரரசு அல்லது அவரது தம்பி முத்துவடுகு அல்லது புதுமுக இயக்குனர் உதயன் ஆகியோரில் ஒருவர் இயக்கக் கூடும் எனத் தெரிகிறது.

சிம்புன்னாலே வம்புதான் போல..


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil