»   »  விஜய்க்கு பாவனா ஸாரி!

விஜய்க்கு பாவனா ஸாரி!

Subscribe to Oneindia Tamil

விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பை பாவனா நிராகரித்துள்ளாராம்.

சித்திரம் பேசுதடி நாயகியான பாவனா காட்டில் இப்போது கோடை மழை பெய்துவருகிறது. ஏகப்பட்ட படங்களை வாரிப் போட்டுக் கொண்டு கல்லாக் கட்டி வருகிறார்மலையாள பால்கோவா பாவனா.

அஜீத், மாதவன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் படு மும்முரமாகநடித்து வரும் பாவனாவைத் தேடி விஜய் பட வாய்ப்பு வந்தது.

அப்பச்சன் தயாரிப்பில் விஜய் நநிடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக த்ரிஷாஅல்லது ஆசினைப் போடலாம் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.


ஆனால் விஜய் செலக்ஷன் பாவனாதான். இதனால் பாவனாவை தயாரிப்பாளர் தரப்புஅணுகியுள்ளது. ஆனால் படு டைட்டாக கால்ஷீட்டை வைத்திருந்ததால் விஜய்படத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லையாம் பாவனாவுக்கு.

ஏதாவது செய்து விஜய் படத்தையும் தேத்தி விடலாம் என பாவனா கடுமையாகமுயற்சித்துப் பார்த்தார். ஆனால் முடியவில்லையாம். இதனால் விஜய் படத்துக்குஸாரி சொல்லி விட்டாராம்.

பாவனாவின் முடிவால் அப்செட் ஆகிப் போன விஜய், வேறு ஹீரோயினைத்தேடுமாறு சொல்லி உள்ளாராம்.

இந்தக் கேரக்டருக்கு பாவனாதான் சரியான சாய்ஸாக இருப்பார், ஆனாலும் அவரால்நடிக்க முடியாமல் போச்சே என்று நெருங்கியவர்களிடம் புலம்பினாராம் விஜய்.


மறுபக்கம் பாவனா கால்ஷீட் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். கை நிறையப்படங்களை புக் செய்து விட்டதால் கால்ஷீட்டை மாற்றி மாற்றிக் கொடுத்து அட்ஜஸ்ட்செய்து நடித்து வருகிறார்.

இடையில் அஜீத் மற்றும் மாதவன் படத்திற்கான படப்பிடிப்பின்போது கால்ஷீட்கிளாஷ் ஆகி விட்டதாம். அதை சமாளிப்பதற்குள் பெரும்பாடு பட்டு விட்டாராம்பாவனா.

Read more about: bhavna avoids vijays film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil