ஹீரோ .. ஹீரோ ..

By Staff

திருப்பாச்சி படம் பார்க்க வீட்டில் காசு கொடுக்காததால் நடிகர் விஜய்யின் ரசிகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தக் கேவலமானசம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

இதையடுத்து அந்த ரசிகரின் வீட்டுக்குச் சென்ற விஜய், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவி செய்தார்.

மதுரை ஆழ்வார்புரம் திருவேங்கட தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். 10ம் வகுப்பு படித்து வந்த இவர் தீவிர விஜய் ரசிகராம். இவரதுதந்தை தமிழ்வாணன் மிகவும் சிரமப்பட்டு பழ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

படிக்க வைக்க வசதியில்லாததால், பாலமுருகனும் தந்தைக்கு உதவியாக பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

விஜய் படங்களை வெறித்தனமாக பார்க்கும் பாலமுருகன், திருப்பாச்சி படத்தை ஓபனிங் ஷோவிலேயே பார்க்க விரும்பி அதற்காக தனதுதந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்றும் இப்படி வெறித்தனமாக படம் பார்க்கும் பழக்கத்தை விடுஎன்றும் அறிவுரை கூறியுள்ளார்.

விஜய்யின் திருப்பாச்சியை முதல் நாளிலேயே பார்க்க முடியாமல் போய் விடுமோ என்று வேதனை அடைந்த பாலமுருகன், கடந்த 13ம்தேதி தனது வீட்டில் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர்இறந்து விட்டார்.

இந்த செய்தி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது படம் பார்க்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ரசிகர் குறித்துஅறிந்ததும் விஜய் அதிர்ச்சி அடைந்து இன்று மதுரை வந்தார்.

பாலமுருகனின் வீட்டுக்குச் சென்று தமிழ்வாணன், அவரது மனைவி ராஜேஸ்வரி, சகோதரர்கள் மணி, பழனி, தங்கைகள் சுமித, சுகன்யாஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அனைவரும் விஜய்யைப் பார்த்ததும் கதறி அழுதனர்.

அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ரூ. 50,000 பணம் கொடுத்தார். மேலும், குடும்பத்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும்செய்வதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் வெளியே வந்த விஜய் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவம் எனக்கு மிகவம் வேதனை தருகிறது. திருமலை படம்ரிலீசானபோதும் காரைக்குடியில் ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபோல சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதுக்கு வேதனையாகவும், சங்கடமாகவும்உள்ளது.

இது முட்டாள்தனமான செயல். என் மீது உண்மையான அன்பு வைத்திருந்தால் இதுபோன்ற கோழைத்தனமான செயலில் ரசிகர்கள் ஈடுபடமாட்டார்கள் என்றார் கோபத்துடன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X