»   »  ஹீரோயின் பஞ்சத்தில் விஜய் விஜய்யின் புதிய படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் பெரும் திண்டாட்டமாகஉள்ளதாம்.தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி பெரும் அடியைத்தந்தது. படம் ஃபிளாப் ஆனதால் விஜய் பெரும் அப்செட் ஆகி விட்டார். ஆனால்அவரது திரையுலக எதிரியான அஜீத் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களைக்கொடுத்து விட்டார். முதலில் வந்த பரமசிவனும், லேட்டஸ்டாக வந்த திருப்பதியும் அஜீத்துக்கு தெம்புகொடுக்கும் வகையில் அமைந்துள்ளன.அடுத்ததாக காட்ஃபாதர் படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதனால் விஜய் டென்ஷனாக உள்ளார். உடனடியாக ஹிட் படம் ஒன்றைக்கொடுத்தாக வேண்டும் என்ற வேகத்தில் இருந்த விஜய்க்கு சரியான கதைஅமையாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டது.இப்போது அது ஒரு வழியாக தீர்ந்து விட்டது. தெலுங்கில் தரணி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் பங்காரம் படத்தை தமிழில் ரீமேக்செய்கிறார்கள். தமிழில் தயாரிக்கப் போவது ஃபிரண்ட்ஸ் படத்தைத் தயாரித்த கேரளத்துக்குஅப்பச்சன். விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.வித்யாசாகர் இசையமைக்கிறார். படத்தை இயக்கப் போவது பரதன்.இவர் கில்லி படத்தில் தரணியிடம் உதவியாளராக இருந்தார்.அப்போது விஜய்யுடன் ஏற்பட்ட நட்பாலும், அவரது திறமையை நன்குஅறிந்திருந்ததாலும், பங்காரம் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு அவரையே இயக்குனராகப்போட விஜய் முடிவெடுத்தார். படத்தின் டெக்னீஷியன்கள் அனைவரும் முடிவாகி விட்டாலும் முக்கியமான மேட்டர்ஒன்று இன்னும் முடியாமல் இழுபறியாக உள்ளது. அதுதான் ஹீரோயின்.விஜய்க்கு ஏற்ற ஹீரோயின் கிடைக்கவில்லையாம். பங்காரம் ஒரிஜினல் படத்தில்நாயகன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிலாவும், ரீமா சென்னும் நடிக்கிறார்கள்.விஜய்க்கு ஜோடியாக யாரைப் போடுவது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.முதலில் அசினை யோசித்துள்ளார்கள். ஆனால் ஹீரோயினுக்கு இதில் நடிக்கவாய்ப்பே இல்லை என்பதால் அசின் மறுத்து விட்டாராம். அடுத்து திரிஷாவைபிடித்துள்ளார்கள். ஆனால் அவர் பயங்கர டைட்டில் இருப்பதால் இப்படத்தில் நடிக்கமுடியாத நிலையாம். சிவகாசி படத்தில் தன்னுடன் குத்தாட்டம் போட்ட நயனதாராவிடம் கேட்டபோதுஅவரும் டைட் கால்ஷீட்டில் இருப்பதாக கூறி விட்டாராம். இதனால் யாரைஹீரோயினாகப் போடுவது என்று பெரும் குழப்பமாக உள்ளதாம்.பேசாமல் ஏதாவது மும்பை அல்லது கேரளக் குட்டி யாரையாவது கூட்டி வந்துவிஜய்க்கு ஜோடி சேர்க்கலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறாராம் இயக்குனர்பரதன்.விஜய்யின் படம் என்றால் நன்றாக டான்ஸ் ஆடும் ஹீரோயினாக இருக்க வேண்டும்என்பதால் அது மாதிரி ஒரு பிகரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.விக்ரமின் பீமா தொடங்கி விட்டது, சூர்யாவின் ஜில்லென்று ஒரு காதல் வரப்போகிறது, அவர்களோடு சேர்ந்து நமது படம் வர வேண்டும், இல்லாவிட்டால்மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டு விடும் என்று டென்ஷனாக இருக்கும் விஜய்க்கு,ஹீரோயின் கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டிருப்பது கூடுதல் டென்ஷனைத் தந்துள்ளது.

ஹீரோயின் பஞ்சத்தில் விஜய் விஜய்யின் புதிய படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் பெரும் திண்டாட்டமாகஉள்ளதாம்.தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி பெரும் அடியைத்தந்தது. படம் ஃபிளாப் ஆனதால் விஜய் பெரும் அப்செட் ஆகி விட்டார். ஆனால்அவரது திரையுலக எதிரியான அஜீத் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களைக்கொடுத்து விட்டார். முதலில் வந்த பரமசிவனும், லேட்டஸ்டாக வந்த திருப்பதியும் அஜீத்துக்கு தெம்புகொடுக்கும் வகையில் அமைந்துள்ளன.அடுத்ததாக காட்ஃபாதர் படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதனால் விஜய் டென்ஷனாக உள்ளார். உடனடியாக ஹிட் படம் ஒன்றைக்கொடுத்தாக வேண்டும் என்ற வேகத்தில் இருந்த விஜய்க்கு சரியான கதைஅமையாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டது.இப்போது அது ஒரு வழியாக தீர்ந்து விட்டது. தெலுங்கில் தரணி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் பங்காரம் படத்தை தமிழில் ரீமேக்செய்கிறார்கள். தமிழில் தயாரிக்கப் போவது ஃபிரண்ட்ஸ் படத்தைத் தயாரித்த கேரளத்துக்குஅப்பச்சன். விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.வித்யாசாகர் இசையமைக்கிறார். படத்தை இயக்கப் போவது பரதன்.இவர் கில்லி படத்தில் தரணியிடம் உதவியாளராக இருந்தார்.அப்போது விஜய்யுடன் ஏற்பட்ட நட்பாலும், அவரது திறமையை நன்குஅறிந்திருந்ததாலும், பங்காரம் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு அவரையே இயக்குனராகப்போட விஜய் முடிவெடுத்தார். படத்தின் டெக்னீஷியன்கள் அனைவரும் முடிவாகி விட்டாலும் முக்கியமான மேட்டர்ஒன்று இன்னும் முடியாமல் இழுபறியாக உள்ளது. அதுதான் ஹீரோயின்.விஜய்க்கு ஏற்ற ஹீரோயின் கிடைக்கவில்லையாம். பங்காரம் ஒரிஜினல் படத்தில்நாயகன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிலாவும், ரீமா சென்னும் நடிக்கிறார்கள்.விஜய்க்கு ஜோடியாக யாரைப் போடுவது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.முதலில் அசினை யோசித்துள்ளார்கள். ஆனால் ஹீரோயினுக்கு இதில் நடிக்கவாய்ப்பே இல்லை என்பதால் அசின் மறுத்து விட்டாராம். அடுத்து திரிஷாவைபிடித்துள்ளார்கள். ஆனால் அவர் பயங்கர டைட்டில் இருப்பதால் இப்படத்தில் நடிக்கமுடியாத நிலையாம். சிவகாசி படத்தில் தன்னுடன் குத்தாட்டம் போட்ட நயனதாராவிடம் கேட்டபோதுஅவரும் டைட் கால்ஷீட்டில் இருப்பதாக கூறி விட்டாராம். இதனால் யாரைஹீரோயினாகப் போடுவது என்று பெரும் குழப்பமாக உள்ளதாம்.பேசாமல் ஏதாவது மும்பை அல்லது கேரளக் குட்டி யாரையாவது கூட்டி வந்துவிஜய்க்கு ஜோடி சேர்க்கலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறாராம் இயக்குனர்பரதன்.விஜய்யின் படம் என்றால் நன்றாக டான்ஸ் ஆடும் ஹீரோயினாக இருக்க வேண்டும்என்பதால் அது மாதிரி ஒரு பிகரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.விக்ரமின் பீமா தொடங்கி விட்டது, சூர்யாவின் ஜில்லென்று ஒரு காதல் வரப்போகிறது, அவர்களோடு சேர்ந்து நமது படம் வர வேண்டும், இல்லாவிட்டால்மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டு விடும் என்று டென்ஷனாக இருக்கும் விஜய்க்கு,ஹீரோயின் கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டிருப்பது கூடுதல் டென்ஷனைத் தந்துள்ளது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் புதிய படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் பெரும் திண்டாட்டமாகஉள்ளதாம்.

தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி பெரும் அடியைத்தந்தது. படம் ஃபிளாப் ஆனதால் விஜய் பெரும் அப்செட் ஆகி விட்டார். ஆனால்அவரது திரையுலக எதிரியான அஜீத் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களைக்கொடுத்து விட்டார்.


முதலில் வந்த பரமசிவனும், லேட்டஸ்டாக வந்த திருப்பதியும் அஜீத்துக்கு தெம்புகொடுக்கும் வகையில் அமைந்துள்ளன.

அடுத்ததாக காட்ஃபாதர் படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது.

இதனால் விஜய் டென்ஷனாக உள்ளார். உடனடியாக ஹிட் படம் ஒன்றைக்கொடுத்தாக வேண்டும் என்ற வேகத்தில் இருந்த விஜய்க்கு சரியான கதைஅமையாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இப்போது அது ஒரு வழியாக தீர்ந்து விட்டது. தெலுங்கில் தரணி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் பங்காரம் படத்தை தமிழில் ரீமேக்செய்கிறார்கள்.


தமிழில் தயாரிக்கப் போவது ஃபிரண்ட்ஸ் படத்தைத் தயாரித்த கேரளத்துக்குஅப்பச்சன். விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.

வித்யாசாகர் இசையமைக்கிறார். படத்தை இயக்கப் போவது பரதன்.

இவர் கில்லி படத்தில் தரணியிடம் உதவியாளராக இருந்தார்.

அப்போது விஜய்யுடன் ஏற்பட்ட நட்பாலும், அவரது திறமையை நன்குஅறிந்திருந்ததாலும், பங்காரம் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு அவரையே இயக்குனராகப்போட விஜய் முடிவெடுத்தார்.


படத்தின் டெக்னீஷியன்கள் அனைவரும் முடிவாகி விட்டாலும் முக்கியமான மேட்டர்ஒன்று இன்னும் முடியாமல் இழுபறியாக உள்ளது. அதுதான் ஹீரோயின்.

விஜய்க்கு ஏற்ற ஹீரோயின் கிடைக்கவில்லையாம். பங்காரம் ஒரிஜினல் படத்தில்நாயகன் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிலாவும், ரீமா சென்னும் நடிக்கிறார்கள்.

விஜய்க்கு ஜோடியாக யாரைப் போடுவது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.

முதலில் அசினை யோசித்துள்ளார்கள். ஆனால் ஹீரோயினுக்கு இதில் நடிக்கவாய்ப்பே இல்லை என்பதால் அசின் மறுத்து விட்டாராம். அடுத்து திரிஷாவைபிடித்துள்ளார்கள். ஆனால் அவர் பயங்கர டைட்டில் இருப்பதால் இப்படத்தில் நடிக்கமுடியாத நிலையாம்.


சிவகாசி படத்தில் தன்னுடன் குத்தாட்டம் போட்ட நயனதாராவிடம் கேட்டபோதுஅவரும் டைட் கால்ஷீட்டில் இருப்பதாக கூறி விட்டாராம். இதனால் யாரைஹீரோயினாகப் போடுவது என்று பெரும் குழப்பமாக உள்ளதாம்.

பேசாமல் ஏதாவது மும்பை அல்லது கேரளக் குட்டி யாரையாவது கூட்டி வந்துவிஜய்க்கு ஜோடி சேர்க்கலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறாராம் இயக்குனர்பரதன்.

விஜய்யின் படம் என்றால் நன்றாக டான்ஸ் ஆடும் ஹீரோயினாக இருக்க வேண்டும்என்பதால் அது மாதிரி ஒரு பிகரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

விக்ரமின் பீமா தொடங்கி விட்டது, சூர்யாவின் ஜில்லென்று ஒரு காதல் வரப்போகிறது, அவர்களோடு சேர்ந்து நமது படம் வர வேண்டும், இல்லாவிட்டால்மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டு விடும் என்று டென்ஷனாக இருக்கும் விஜய்க்கு,ஹீரோயின் கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டிருப்பது கூடுதல் டென்ஷனைத் தந்துள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil