ஹீரோ .. ஹீரோ ..
விஜய்க்கும் அந்த ஆசை வந்து விட்டது. அதாங்க, வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிற ஆசை.
விக்ரம், அஜீத் என இன்றைய தலைமுறை நடிகர்கள் எல்லாம், படத்திற்குப் படம் வித்தியாசமாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில், விஜய் மட்டும் ஒரே மீசை,ஹேர்ஸ்டைல் என டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.
திரையுலகில் தனக்கென தனியிடம் கிடைத்து விட்டது. இனிமேல், இதைத் தக்க வைத்துக் கொள்ள வித்தியாசமான வேடங்களில் நடிப்பது என்ற முடிவுக்குவந்துள்ளாராம் விஜய்.
கதைக்காக எந்தவித தியாகத்தையும் (வேற என்ன... மொட்டையடிக்கலாம், மீசையை எடுக்கலாம்) செய்யவும் விஜய் தயாராக உள்ளாராம்.
தாமதமான முடிவாக இருந்தாலும், நல்ல முடிவுதான்.
Comments


Click it and Unblock the Notifications