விஜய் தேடும் கதை! விஜய், ஆசின் நடிக்க, இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாககூறப்பட்ட முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்று கூறப்படுகிறது.அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக விஜய் மாறிய பின்னர் அவருக்கு மிகப் பெரிய ஹிட்படங்களைக் கொடுத்தவர் பேரரசு. அவரது இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி,சிவகாசி ஆகிய இரு படங்களும் விஜய் ரசிகர்களுக்கு பெருத்த தீனியாக அமைந்தன.விஜய்யின் மார்க்கெட்டையும் எங்கேயோ எகிற வைத்தன. விஜய்யின் சம்பளமும் ரூ.5 கோடியானது. தனது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி வைத்ததற்காக பேரரசுவைபாராட்டித் தள்ளி விட்டார் விஜய். பேரரசுவின் தம்பி முத்துவடுகும், இயக்குனராக உயர்ந்தார். அவரது முதல் படமாகமுரசு உருவானது. அண்ணன் கதை, வசனத்தை எழுத, விஜய், ஆசினை வைத்து முரசுபடத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.ஆனால் இப்போது விஜய் ரூபத்தில் முரசுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.விஜய் அதிகம் நம்பிய ஆதி கைவிட்டு விட்டதால் அவர் உடைந்து போயுள்ளார்.தொடர்ந்து ஹிட் படங்களையேக் கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி சடர்ன் பிரேக்காகமாறி அப்செட் செய்து விட்டது.இதனால் உடனடியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஒன்றைக் கொடுத்தாக வேண்டிய நிலையில்உள்ளார் விஜய். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.விஜய்யின் பரம எதிரியாக இருந்து சமீபத்தில் நண்பரான அஜீத், பரமசிவம் மூலம்மீண்டும் நிமிர்ந்துள்ளார். இதனால் தெம்பாகிப் போன அஜீத், இனிமேல் நான்பேசமாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று பேட்டி அளித்தார். அதை உறுதி செய்வது போல காட்ஃபாதர், திருப்பதி என அடுத்தடுத்து அஜீத்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில் முதலில் திருப்பதி வரவுள்ளது.திருப்பதியை இயக்கியிருப்பவர் விஜய்யின் மனம் கவர்ந்த பேரரசு. எனது முந்தையபடங்களான திருப்பாச்சி, சிவகாசியை விட மிகப் பெரிய ஹிட் படமாக திருப்பதிஅமையும் என்று பேரரசு கூறி வருகிறார்.இதனால் நல்ல கதையைத் தேர்வு செய்து அஜீத்தை அமுக்க வேண்டிய நிலையில்இருக்கிறார் விஜய். இந்த நேரத்தில் புதுமுகமான முத்துவடுகின் இயக்கத்தில் (முரசும்ஆக்ஷன் படம் தானாம்) நடிப்பது சரியாக இருக்காது என விஜய் நினைக்கிறார்.இதனால் இப்போதைக்கு அந்தப் வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து முத்துவடுகு அப்செட் ஆகி அண்ணனிடம் ஓடியுள்ளார். பேரரசுவும்,விஜய்யைப் பார்த்துப் பேசினாராம். தம்பி இயக்குகிறார் என்று கவலையே படாதீங்க.வசனத்தை நான் தான் எழுதப் போகிறேன், அத்தோடு முத்துவடுகுக்கு உதவியாகவும்இருக்கப் போகிறேன்.எனவே இதை நானே இயக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றுசமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் விஜய் இறங்கி வரவில்லையாம். நான் எனது ரசிகர்களை ஏமாற்றவிரும்பவில்லை. முரசை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நல்லகதையைத் தேடி வருகிறேன் என்று பேரரசை திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்விஜய்.இதனால் முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்கிறார்கள். சூப்பர் ஹிட் தரும்வகையிலான கதையைத் தேடிக் கொண்டிருக்கும் விஜய், ஹீரோயின் ஆசின் தான்என்பதில் தீர்மானமாய் இருக்கிறாராம்.ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் புலி படத்தில் நடிப்பதாக இருந்த விஜய்,கதையில் சிம்பு வந்து தலையிட்டு திருவிளையாடல் செய்ததால் அந்தப் படத்தைடிராப் செய்தார்.ரீமேக் படங்களிலும் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.இப்போது முரசையும் அவர் ஒத்திவைத்து விட்டார். அஜீத்தை டேக்கிள் செய்ய விஜய் அடுத்து என்னதான் செய்யப்போகிறார் என்பதுதான்கோலிவுட்டின் இன்றைய கேள்வி.குட்டீஸ் 1:இதற்கிடையே திருப்பதி படத்தில் ஒரு குத்தாட்டம் போட ஆசினைக்கூப்பிட்டார்களாம். அவர் மறுத்துவிட்டாராம். இதையடுத்து கோபிகாவைக்கூப்பிட்டுள்ளார் அஜீத். அவரும் மறுத்துவிடவே, மும்பை குத்தாட்ட சுந்தரிகளில்யாராவது ஒருவரை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்களாம்.குட்டீஸ் 2:ஆசினின் செல்போனில் இப்போது ரிங்டோன் என்ன தெரியுமோ?கானா லோகநாதனின் வாள மீனுக்கும்.. பாட்டு தான்.

By Staff

விஜய், ஆசின் நடிக்க, இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்குவதாககூறப்பட்ட முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்று கூறப்படுகிறது.

அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக விஜய் மாறிய பின்னர் அவருக்கு மிகப் பெரிய ஹிட்படங்களைக் கொடுத்தவர் பேரரசு. அவரது இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி,சிவகாசி ஆகிய இரு படங்களும் விஜய் ரசிகர்களுக்கு பெருத்த தீனியாக அமைந்தன.

விஜய்யின் மார்க்கெட்டையும் எங்கேயோ எகிற வைத்தன. விஜய்யின் சம்பளமும் ரூ.5 கோடியானது. தனது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி வைத்ததற்காக பேரரசுவைபாராட்டித் தள்ளி விட்டார் விஜய்.


பேரரசுவின் தம்பி முத்துவடுகும், இயக்குனராக உயர்ந்தார். அவரது முதல் படமாகமுரசு உருவானது. அண்ணன் கதை, வசனத்தை எழுத, விஜய், ஆசினை வைத்து முரசுபடத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது விஜய் ரூபத்தில் முரசுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளதாம்.

விஜய் அதிகம் நம்பிய ஆதி கைவிட்டு விட்டதால் அவர் உடைந்து போயுள்ளார்.தொடர்ந்து ஹிட் படங்களையேக் கொடுத்து வந்த விஜய்க்கு, ஆதி சடர்ன் பிரேக்காகமாறி அப்செட் செய்து விட்டது.

இதனால் உடனடியாக சூப்பர் டூப்பர் ஹிட் ஒன்றைக் கொடுத்தாக வேண்டிய நிலையில்உள்ளார் விஜய். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

விஜய்யின் பரம எதிரியாக இருந்து சமீபத்தில் நண்பரான அஜீத், பரமசிவம் மூலம்மீண்டும் நிமிர்ந்துள்ளார். இதனால் தெம்பாகிப் போன அஜீத், இனிமேல் நான்பேசமாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று பேட்டி அளித்தார்.


அதை உறுதி செய்வது போல காட்ஃபாதர், திருப்பதி என அடுத்தடுத்து அஜீத்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில் முதலில் திருப்பதி வரவுள்ளது.

திருப்பதியை இயக்கியிருப்பவர் விஜய்யின் மனம் கவர்ந்த பேரரசு. எனது முந்தையபடங்களான திருப்பாச்சி, சிவகாசியை விட மிகப் பெரிய ஹிட் படமாக திருப்பதிஅமையும் என்று பேரரசு கூறி வருகிறார்.

இதனால் நல்ல கதையைத் தேர்வு செய்து அஜீத்தை அமுக்க வேண்டிய நிலையில்இருக்கிறார் விஜய். இந்த நேரத்தில் புதுமுகமான முத்துவடுகின் இயக்கத்தில் (முரசும்ஆக்ஷன் படம் தானாம்) நடிப்பது சரியாக இருக்காது என விஜய் நினைக்கிறார்.

இதனால் இப்போதைக்கு அந்தப் வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம்.


இதையடுத்து முத்துவடுகு அப்செட் ஆகி அண்ணனிடம் ஓடியுள்ளார். பேரரசுவும்,விஜய்யைப் பார்த்துப் பேசினாராம். தம்பி இயக்குகிறார் என்று கவலையே படாதீங்க.வசனத்தை நான் தான் எழுதப் போகிறேன், அத்தோடு முத்துவடுகுக்கு உதவியாகவும்இருக்கப் போகிறேன்.

எனவே இதை நானே இயக்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றுசமாதானப்படுத்தியுள்ளார்.

ஆனால் விஜய் இறங்கி வரவில்லையாம். நான் எனது ரசிகர்களை ஏமாற்றவிரும்பவில்லை. முரசை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நல்லகதையைத் தேடி வருகிறேன் என்று பேரரசை திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்விஜய்.

இதனால் முரசு இப்போதைக்கு ஒலிக்காது என்கிறார்கள். சூப்பர் ஹிட் தரும்வகையிலான கதையைத் தேடிக் கொண்டிருக்கும் விஜய், ஹீரோயின் ஆசின் தான்என்பதில் தீர்மானமாய் இருக்கிறாராம்.

ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் புலி படத்தில் நடிப்பதாக இருந்த விஜய்,கதையில் சிம்பு வந்து தலையிட்டு திருவிளையாடல் செய்ததால் அந்தப் படத்தைடிராப் செய்தார்.

ரீமேக் படங்களிலும் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.இப்போது முரசையும் அவர் ஒத்திவைத்து விட்டார்.


அஜீத்தை டேக்கிள் செய்ய விஜய் அடுத்து என்னதான் செய்யப்போகிறார் என்பதுதான்கோலிவுட்டின் இன்றைய கேள்வி.

குட்டீஸ் 1:

இதற்கிடையே திருப்பதி படத்தில் ஒரு குத்தாட்டம் போட ஆசினைக்கூப்பிட்டார்களாம். அவர் மறுத்துவிட்டாராம். இதையடுத்து கோபிகாவைக்கூப்பிட்டுள்ளார் அஜீத். அவரும் மறுத்துவிடவே, மும்பை குத்தாட்ட சுந்தரிகளில்யாராவது ஒருவரை கொண்டு வர முடிவு செய்துவிட்டார்களாம்.

குட்டீஸ் 2:

ஆசினின் செல்போனில் இப்போது ரிங்டோன் என்ன தெரியுமோ?

கானா லோகநாதனின் வாள மீனுக்கும்.. பாட்டு தான்.

Read more about: vijay looking for good story
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X