ஹீரோ .. ஹீரோ ..
நடிகர் விஜய் தனது பிறந்த நாளை சென்னை தீவுத் திடலில் ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடவுள்ளார்.இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
விஜய் தற்போது நடித்து வரும் "யூத்" படத்தின் பாடல் கேசட் ரெடியாகி விட்டது. இந்த நிலையில் விஜய்க்கு வரும்22ம் தேதி 28வது வயது பிறக்கிறது.
இதை இரண்டையும் இணைத்து பெரிய விழாவாகக் கொண்டாட படத்தின் தயாரிப்பாளரான பூர்ணசந்திர ராவ்முடிவெடுத்தார். இதையடுத்து பாடல் கேசட் வெளியீட்டு விழாவும், விஜய்யின் பிறந்த நாள் விழாவும் ரசிகர்கள்முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.
சென்னைத் தீவுத் திடலில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் வரைகூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களாம். விழா 22ம் தேதி மாலை நடக்கிறது.
கேசட் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு விஜய் கேக் வெட்டி தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
பின்னர் கேசட்டில் உள்ள பாடல்களை இசையமைப்பாளர் மணி சர்மாவின் குழுவினர் மேடையில் பாடுகிறார்கள்.நடன மாஸ்டர் ரவிதேவ் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் அப்போது நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











