விஜய் 63 ஸ்க்ரிப்ட் செம்ம ஸ்ட்ராங்காக உள்ளது: இந்த தகவலை சொல்பவர் அட்லி

Recommended Video

விஜய் 63 ஸ்க்ரிப்ட் ஸ்ட்ராங் என்று ரகசியத்தை கக்கிய இயக்குனர் அட்லீ- வீடியோ

சென்னை: விஜய்யின் அடுத்த படம் டபுள் மாஸாக இருக்கும் என அட்லி தெரிவித்துள்ளார்.

சர்க்கார் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க உள்ளார்.

Vijay 63 will be double the Mass!

ஏற்கனவே அட்லியின் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் திரைப்படங்கள் வணீக ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் பெற்றது. அதுவும் மெர்சல் திரைப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார் அட்லி.

அடுத்ததாக ஏஜிஎஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் விஜய்யின் 63 வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் ஏகப்பட்ட நிபந்தனைகளை அட்லிக்கு போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைவது அளவிட முடியாத மகிழ்வைத் தருவதாகக் கூறினார். மேலும், இப்படத்திற்கு மிக ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாகவும், இதற்கு முந்தைய அட்லி படங்களில் விஜய்யை பார்த்ததைவிட இரண்டு மடங்கு மாஸான விஜய்யைப் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

விஜய் பட ஷூட்டிங் ஆரம்பமாக உள்ள அந்த நாளுக்காக காத்திருப்பதாகக் கூறும் அட்லி, தற்போது மற்ற நடிகர்களை தேர்வு செய்வதில் பிசியாக இருக்கிறார். இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பரத் எனும் நான் திரைப்படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்த கியாரா அத்வானி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X