என்னாது விஜய் முதல்வரா?: அட, அப்படித்தான்பா சொல்றாங்க
சென்னை: விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் நாள் நெருங்கி வருகிறது.
விஜய்யை தமிழக முதல்வராக்கிப் பார்க்க விரும்புகிறார்கள் அவரின் ரசிகர்கள். ஆண்டுதோறும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடிக்கும் போது வருங்கால முதல்வரே என்ற வாசகத்தை மறக்காமல் வைத்துவிடுவார்கள்.
ரசிகர்களின் ஆசையில் தவறு இல்லை என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் தெரிவித்துள்ளார்.

அரசியல்
அமெரிக்காவில் பெரிய ஆளாக இருக்கும் விஜய் தமிழகத்திற்கு வந்தபோது அவரின் வாக்குரிமையை வேறு யாரோ பயன்படுத்தியது தெரிந்து கொந்தளித்து அரசியலை சுத்தம் செய்வது தான் சர்கார் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் விஜய்க்கு கிடைத்துள்ள பெரிய பதவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்
வாக்குரிமை பறிக்கப்பட்ட கோபத்தில் தமிழகத்தில் தங்கி போராடும் விஜய் முதல்வர் ஆகிறாராம். விஜய்யை நிஜத்தில் முதல்வராக்கிப் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்கு அவர் படத்தில் முதல்வராகியுள்ள தகவல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. முதலில் ரீல் முதல்வர், அதன் பிறகு ரியல் முதல்வர் எங்கள் அண்ணன் விஜய் என்கிறார்கள் ரசிகர்கள்.

சன் பிக்சர்ஸ்
சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தி அன்று அதாவது அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவை சன் பிக்சர்ஸ் சும்மா தெறிக்க விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஷூட்டிங்ஸ்பாட்
சர்கார் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறது. அந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள். முதன் முதலாக வெளியிடப்பட்ட புகைப்படத்தில் விஜய் ரொம்பவே சீரியஸாக முகத்தை வைத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











