»   »  ரஜினி போட்ட பாதையில் அஜீத்தும் விஜய்யும்!

ரஜினி போட்ட பாதையில் அஜீத்தும் விஜய்யும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரேஸில் அஜித், விஜய் இருவருமே கிட்டத்தட்ட ஒரே இடத்தில் இருந்தாலும் கூட செல்வாக்கில் அஜித்தும், வசூலில் விஜய்யும்தான் சற்றே முந்துகிறார்கள். சில ஆண்டுகளாக பல விஷயங்களில் அஜித்தை விஜய் காப்பியடிக்கிறார் என்ற ரீதியில் செய்திகள் வருகின்றன.

மீடியாக்களைச் சந்திப்பது, அவ்வப்போது பேட்டிகள் கொடுப்பது என்று இருந்து வந்த விஜய் இப்போதெல்லாம் அஜித் பாணியில் மீடியாக்களுக்கு பேட்டிகள் கொடுப்பதே இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அட, தன் படங்களின் புரமோஷன்களுக்கே வருவதில்லை விஜய். இதைத்தான் சில ஆண்டுகளாகச் செய்து வருகிறார் அஜீத்தும்.

Vijay, Ajith follow Rajini's style

பொதுவாக அஜித்தான் பைக் ஓட்டினார், தாபாவில் ரொட்டி சாப்பிட்டார் என்று செய்திகள் வரும். சமீபகாலமாக பைக் ஓட்டுவதிலும் விஜய்க்கு ஆர்வம் வந்திருக்கிறது. அந்த வரிசையில் இன்னொரு விஷயமும் சேர்ந்திருக்கிறது.

அஜித் நடிக்க வீரம் சிவா இயக்கும் படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. பல்கேரியா உள்ளிட்ட சில நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில்தான் நடக்கவிருக்கிறதாம். அமெரிக்காவில் தொடங்கும் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கவிருக்கிறது.

ஆனால் ஒன்று... இந்த விஷயத்திலும் ரஜினிதான் இருவருக்கும் முன்னோடி. கபாலி படத்தின் படப்பிடிப்பை துணிந்து மலேசியாவிலேயே முழுக்க வைத்ததோடு ஒரு வெளிநாட்டு கதைக் களத்தில் நடித்தார் ரஜினி. அவர் போட்ட பாதையில் இப்போது அஜீத்தும், விஜய்யும்!

English summary
Vijay also joined with Ajith to shoot full movie in abroad like Rajini’s Kabali movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil